Pages

Saturday, 24 September 2011

இப்படித்தான் ஆரம்பிக்கிறது லஞ்சம்.....



லஞ்ச ஊழலுக்கு எதிரான குரல்கள் நாடெங்கிலும் ஒலிக்கத் 
தொடங்கி உள்ளன. 
லஞ்சம் எப்படி உருவாகிறது என்று அடையாளம் காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட 
குறும்படம் இது.


உலகின் மிக நீளமான பாலம்.....!


26.4 மைல் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான குறுக்கு கடல் பாலம் அண்மையில் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. 








எண்பது பில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 110 அடி அகலம் கொண்ட இந்தப் பாலத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் பிடித்தன.






 5,000 தூண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் கடலுக்கடியில் சுரங்கப்பாதை இணைந்ததாகவும்  அமைந்துள்ளது.

தகவல்: சிவசு

Tuesday, 13 September 2011

'என் கடமை என் பூமி' - மரக்கன்று நடும் விழா... காணொளிக் காட்சிகள்..


சிறப்பாக நடந்தேறிய மரக்கன்று நடும் விழா...!

சேலம் பெரியார் பல்கலைக் கழகம், 
சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றுடன் 
இந்திய அரசின் நேரு யுவ கேந்திராவின் சேலம் கிளையும் இணைந்து 
சேலம் மாவட்டம் சங்ககிரி 
அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் 
13.09.2011 நாளன்று 
"என் கடமை என் பூமி" என்ற பெயரில் நடத்திய 
மரக்கன்று நாடு விழா 
- சில காட்சிகள்..

















படங்கள்:இளங்கனி

Monday, 12 September 2011

"என் கடமை என் பூமி" மரம் நாடு விழா....

சேலம் பெரியார் பல்கலைக் கழகமும் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றமும் தங்களுக்குள்ளாகச் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்  வாயிலாகச் சமூக நோக்குடன் கூடிய பல நல்ல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வருகிற 13.09.2011 நாளன்று சேலம் மாவட்டம் சங்ககிரி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் "என் கடமை என் பூமி" என்ற பெயரில் மரம் நாடு விழா இனிது நடக்க வுள்ளது.



சேலம் பெரியார் பல்கலைக் கழகம், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றுடன் இந்திய அரசின் நேரு யுவ கேந்திராவின் சேலம் கிளையும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளன.

அனைவரையும் வருக வருகவென அன்புடன் அழைக்கிறோம்!

Friday, 9 September 2011

இப்படியும் ஒரு அலங்காரம்...!


பொதுவாகப் பெண்கள் அழகாகத் தம்மை அலங்காரம் செய்வதிலேயே முக்கால்வாசி காலத்தைக் கழிப்பர். ஆனால் இங்கு ஒரு பெண்மணி வித்தியாசமான ஒரு அலங்காரத்தால் இப்படியும் நடக்குமா என்று நம்மைப் பதைபதைக்க வைக்கிறார். 


பிரேசில் நாட்டில் பிறந்து பிரிட்டனில் வசிக்கும் எலன் டேவிட்சன் என்ற பெண்மணி தன் உடல் முழுக்க பச்சை குத்திக் கொண்டு உடல் முழுக்கத் துளையிட்டு அதில் ஆபரணங்களைப் பூட்டி அழகு காட்டி நம்மைப் பயமுறுத்துகிறார். 


அந்தப் பேதைப் பெண்மணி தன்னுடலில் 4225 துளைகள் இட்டுள்ளார் என்பது நம்மை மலைக்க வைக்கும் செய்தி. அதில் பெரும்பாலான துளைகள் முகத்தில் இடப்பட்டுள்ளன என்பது கூடுதல் செய்தி. 

பார்ப்பதற்கே பயங்கரமான இந்த அலங்காரம் ஒரு உலக சாதனை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.