Pages

Thursday, 7 February 2013

எங்களது சாதனைப் பயணத்தின் மைல் கல்!

நினைத்துப் பார்க்கவே 
பரவசமாக இருக்கிறது..... 

சேலத்தில் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கான கம்பீரமான கணினி மயமாக்கப்பட்ட பணிமனை, கூட்ட அரங்கம், செய்தியாளர் அறை, நூலகம் போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதான செய்தியாளர் வளாகம் ஒன்று உருவாகியுள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் நவீன தொழில்நுட்பத்தோடு ஏறத்தாழ 15 லட்ச ரூபாய் செலவில் இந்த வளாகம்  உருவானதின் பின்னணியில்  சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்துக்குக் கணிசமான பங்களிப்பு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

2011ல் சேலம் செய்தியாளர்களுக்கென சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் தனியாக அறை எதுவுமே ஒதுக்கப்படவில்லை. பல மாதங்களாக மாவட்ட நிர்வாகமும் இதைப்பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் தான் இதற்காக கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தி ஆட்சியரின் கவனத்துக்கு இதனை எடுத்துச் சென்றது.

செய்தியாளர் நலன் கருதி நடந்த போராட்டம் என்ற போதிலும் நமது அமைப்பைத் தவிர வேறு யாரும் இதில் பங்கேற்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நமது போராட்டம் சேலம் ஆட்சியர் திரு மகரபூஷணத்தின் கவனத்தை ஈர்க்கவே நமது கோரிக்கையை ஏற்று செய்தியாளர்களுக்கென தனி அறையை ஒதுக்கித் தரும்படி உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடிக்கப்படாமல் இருந்த பழைய கட்டிடம் ஒன்றின் மாடி நமக்கான அறையாக ஆட்சியரால் ஒதுக்கப்பட்டது. எந்தவிதமான வசதிகளும் இல்லாமல் காணப்பட்ட அந்த அறையை பல்வேறு வசதிகளுடன் கூடிய செய்தியாளர் வளாகமாக மாற்றிக் காட்டுவது என்று சூளுரைத்து அதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் இறங்கியது நமது அமைப்பு. 

இந்த சமயத்தில் நம் முயற்சியின் மேல் நம்பிக்கை வைத்து இன்னொரு சகோதர அமைப்பும் நம் முயற்சியில் இணைய முன் வந்தது. பெரிய தொகையை செலவழித்தால் மட்டுமே செய்தியாளர்களுக்கான தனி வளாகம் சாத்தியம். ஆனால் நம்மிடமோ சொல்லிக் கொள்ளும் விதத்தில் நிதி நிலைமை இல்லை. 


2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதற்காக ஒரு முயற்சியை நாம் மேற்கொண்டோம்.

சென்னையில் இருப்பதைப் போன்று சேலத்தில்  பத்திரிகையாளர்களுக்கான ஒரு வளாகத்தை ஏற்படுத்தித் தர உங்களால் மட்டுமே முடியும் என்று நாம் சேலம் விநாயகா மிஷன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழக     வேந்தர் திரு சண்முகசுந்தரத்தை அணுகி வேண்டினோம். 


நமது வேண்டுகோளுக்கு செவிமடுத்த விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழக வேந்தர் "உங்களது கோரிக்கையை நான் ஏற்கிறேன்; உங்களுக்கான அறையை அழகுற அமைத்துத் தருவது என்பொறுப்பு" என்று கூறி இன்ப அதிர்ச்சியினைத் தந்தார்.

உடனடியாக தன் உதவியாளர் திரு ராவணனை அழைத்து செய்தியாளர் அறையை  அமைத்துத் தருவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.          2012ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து இதற்கான வேலைகள் தொடங்கி  நடந்தன. 


இந்த நிகழ்வை நினைவு கூறும் விதத்தில் அந்த கட்டடத்துக்கு முன்பாக இருந்த மைதானத்தின் ஒரு ஓரத்தில் வரிசையாக மரக் கன்றுகள் நம்மால் நடப்பட்டன.


இப்படியாகத் தொடங்கப்பட்ட வேலைகள்.....



இப்படியாக நிறைவு பெற்றுள்ளன....!




தனக்குத் தொடர்ந்து பல்வேறு பணிகள் இருந்த போதிலும் செய்தியாளர் அறைக்கான வேலைகள் பற்றி அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த கட்ட உத்தரவுகள்  விநாயகா மிஷன்ஸ் வேந்தரால் பிறப்பிக்கப்பட்டு வந்தன. 

நிதான கதியில் அதே நேரத்தில் பாங்குற நடந்த பணிகளின் விளைவாக இன்று சேலத்தில் செய்தியாளர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இடத்தை ஒதுக்கித் தந்த ஆட்சியருக்கும், வளாகத்தை உருவாக்கித் தந்த விநாயகா மிஷன்ஸ் வேந்தருக்கும் நமது நன்றிகளை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது....

வரும் பிப்ரவரி ஒன்பதாம் நாளன்று இந்த வளாகம் சீரும் சிறப்புடன் திறக்கப்பட உள்ளது. 

அதற்கான அழைப்பிதழ் இதோ.... 



வாருங்கள்! 
வந்து எங்களை வாழ்த்துங்கள்...!!

Saturday, 26 January 2013

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற....


1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா...? – முடியும்...!

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.

3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி
http://www.mediafire.com/?b27rb10ub00m94d

4. தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.

5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.

6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்

7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.

8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GB மெமரி கார்டாக மாறிவிடும்.

9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.

Monday, 12 November 2012

வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்


பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்

1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்