ஆறு விரலைக் கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டம்
வாய்ந்தவர்கள் எனப் பெரியவர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம். தனது
கைகளிலும். கால்களிலுமாக மொத்தம் 34 விரல்ககளைக் கொண்டு ஒருவர் பிறந்திருப்பதாக
யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...?
சில சமயங்களில் நிஜங்கள் கற்பனையையும் ஓரம்
கட்டி விடுவதுண்டு....
உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்சத் சக்சேனா என்ற ஒரு வயது சிறுவன் பிறப்பால்
பல கின்னஸ் சாதனைகளை முறியடித்து இருக்கிறான். இயல்புக்கு மாறாக இந்தச் சிறுவனின் கைகளிலும்
கால்களிலுமாக மொத்தம் 34 விரல்ககள் உள்ளன.
கைகள் ஒவ்வொன்றிலும் ஏழு விரல்கள் கால்கள்
ஒவ்வொன்றிலும் பத்து விரல்கள் என மொத்தம்
முப்பத்துநான்கு விரல்கள் இவனுக்கு உள்ளன.
கடந்த ஆண்டு அக்சத் பிறந்த பொது அவன் கையில்
கட்டை விரல்களே இல்லை. தற்போது அவனுடைய அதிகப் படியான விரல்களை நீக்க விரைவில்
ஆபரேஷன் நடக்க உள்ளது. இதன் மூலம் அவனுக்கு செயற்கையான கட்டைவிரல்களை உருவாக்கி
இணைக்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment