ஊடகவியல் மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கம் ஒன்று கடந்த 24ந் தேதி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல்துறையின் சார்பில் அதன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் இணைந்து பங்கேற்றது.
இந்தப் பயிலரங்கத்தில் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர். டி. சி. எனப்படும் மீடியா ரிசர்ச் ட்ரைனிங் சென்டர் பிரிவில் பயிலும் இருபால் மாணவர் முப்பது பேருடன் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல்துறையின் மாணவ மாணவியர் முப்பது பேர் என மொத்தம் அறுபது பேர் பங்கேற்றனர்.
இவர்களுடன் வழக்கம் போல சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல்துறையின் மாணவர்களும் இணைந்து பங்கேற்றனர்.
விழாவுக்கு வந்திருந்தவர்களை இதழியல் மற்றும் செய்தித் தொடர்பியல் துறையின் தலைவரான திரு.வை.நடராசன், பேராசிரியர் திரு.நந்தகுமார் ஆகியோர் வரவேற்று உற்சாகப் படுத்தினர். இவர்களுடன் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றச் செயலாளர் திரு.தங்கராஜா, தலைவர் திரு வை.கதிரவன் ஆகியோரும் வரவேற்பில் பங்கேற்றனர்.
பயிலரங்கத்தினை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர்.முத்துச் செழியன் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஊடகத் துறையில் பயிலும் மாணவியான யாழ் தர்மினி பத்மநாதனின் படைப்பான 'எங்கட கதைதான்....' என்ற சிறுகதைத் தொகுப்பினை அரங்கத்துக்கு அறிமுகம் செய்து துணைவேந்தர் உற்சாகமூட்டினார்.
ஊடகவியல் மாணவர்களுக்கு ஊரகச் செய்திகள் தொடர்பான உரைவீச்சை வழங்க வந்திருந்த சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தைச் சேர்ந்தவரும், மூத்த பத்திரிகையாளரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் முதுநிலைச் செய்தியாளருமான திரு.ராஜசேகருக்கு துணைவேந்தர் திரு.முத்துச் செழியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மீடியா ரிசர்ச் ட்ரைனிங் சென்டர் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான திரு.தேவநாதன், 'ஊரகப் புகைப்படக்கலை' பற்றிய நுணுக்கங்களை மாணவர்களுக்கு வழங்க வந்திருந்த சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தைச் சேர்ந்தவரும், விருதுகள் பல பெற்ற புகைப்படக் கலைஞரும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் புகைப்படக்காரருமாகிய திரு. சுதாகரனுக்கு நினைவுப் பரிசினை வழங்கிச் சிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து பயிலரங்கத்தின் முதல் நிகழ்வாக செய்தியாளர் திரு. ராஜசேகரன் ஊரகச் செய்திகள் பற்றிய தனது உரைவீச்சினை மாணவர்களுக்கு வழங்கினார். மாணவர்கள் அதனை ஆவலுடன் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
இதனையடுத்து புகைப்படச் செய்தியாளரான திரு. சுதாகரனின் ஊரகப் புகைப்படக்கலை பற்றிய விளக்கம் ஸ்லைடுகள் திரையிடப்பட்டு அதன் மூலம் வழங்கப்பட்டது. அதன் பிறகு மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 'ஊரகச் செய்திகளில் பருவ இதழ்கள்' என்ற தலைப்பில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும் குமுதம் குழும சேலம் சரகச் செய்தியாளருமான திரு.வை.கதிரவன் கருத்துரை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக அதே தலைப்பில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் செய்தித் தொடர்பாளரும், நக்கீரன் வாரமிருமுறை இதழின் சேலம் செய்தியாளருமான திரு.இளங்கோவன் தனது உரைவீச்சினை வழங்கினார்.
பயிலரங்கத்தின் இறுதியாக பேராசிரியர் திரு.இராமலிங்கம் ஊராகச் செய்திகள் எந்த மாதிரி எல்லாம் மாற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக்காட்டி பங்கேற்பாளர்களின் ஐயங்களைத் தெளிய வைத்தார்.
பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் நிகழ்வின் முடிவில் வழங்கப்பட்டன.
பயிலரங்க நிறைவுரை ஆற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மீடியா ரிசர்ச் ட்ரைனிங் சென்டர் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான திரு.தேவநாதன் "எங்கள் நாட்டின் செய்தியாளர் அமைப்புடன் எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊடகப்பிரிவு இணைந்து செயலாற்றுகிறது.
அதைப் போன்றே சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகத்துடன் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றமும் இணைந்து செயல்படுவது பெருமைக்குரிய ஒன்று" என்றார். அவரது நிறைவுரையுடன் விழா நிறைவு பெற்றது.
அதைப் போன்றே சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகத்துடன் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றமும் இணைந்து செயல்படுவது பெருமைக்குரிய ஒன்று" என்றார். அவரது நிறைவுரையுடன் விழா நிறைவு பெற்றது.
the wonderful efforts of the members of the SDPC in sharing their rich experience with the visiting Jaffna students and the Univ of Madras students need special appreciation. they were with the organisers throughout the day of the seminar and were giving very useful tips into the realities of the media profession. the exchange must have benefitted both the students of indian departments and the visiting sri lankan MRTC students. their enthusiasm is infectious and under the leadership of kathir, the president of the SDPC, they did a wonderful job. those of you who came and encouraged the periyar univ JMC dept effort is laudable and would definitely go a long way in bringing the right attitude and outlook in the minds of the budding journalists. let the good work continue.
ReplyDeleteKudos to SDPC and its office bearers and Dr V Natarajan and Dr Nandakumar of Periyar University's Dept of Mass Communication for making this event a memorable one.
ReplyDeleteOn behalf of my colleagues and students at University of Madras' Dept of Journalism and Communication, a big thanks to SDPC members and Periyar University colleagues.
The most precious day in my life. sharing the experience with salem periyar university students.. Received a useful lectures and ideas from expert journalist, very friendly lecturers sharing their experience with our students.. at the end of the seminar mutram performance every one started dancing on the field. On behalf of University of Madras, Dept of Journalism and Communication our heartful thanks to periyar university and salem press club.
ReplyDeleteUntil today, the existence of a tour to India will not forget your friendship and best of all they taught.
ReplyDeleteநாம்
ReplyDeleteசேலத்தில் கழித்த நாள் ஒன்று
பெற்ற அறிவோ பலது
நன்றி பெரியார் பல்கலைக்கழகம்...