Pages

Saturday, 1 October 2011

நோக்கியா - தமிழ் மொழிப் பொதி (Nokia - Tamil language Pack)

 தமிழ் பயன்பாடு கணிணி, இணையம் (Internet) முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. இந்திய வட்டார மொழிகளுள் தமிழ் இணையத்தில் அதிக பயன்பாட்டை கொண்டுள்ளது. அதில் முக்கியமான ஒரு பரிமாணம், கைப்பேசியில் இணையப் பயன்பாடு.

 இப்பதிவு நோக்கம் நோக்கியா சிம்பயன் இயங்கு தளத்திற்கான (Operating System) தமிழ் மொழி பொதி / தொகுப்பின் தேவையை சற்று பார்ப்போம்.

கணிணி பயன்பாட்டிற்க்கு தேவையான விண்டோஸ் / லினக்ஸ் இயங்கு தளம் போன்று கைப்பேசிகளுக்கும் இயங்கு தளம் பல உள்ளது, நோக்கியாவின் அடிப்படை போன்கள் சிரியஸ் 30, 40 (Series 30, 40) என்று இருக்கும், இவைகளை வழக்கில் இயங்கு தளத்தில் பட்டியலிடப்படுவதில்லை, அதற்கான சிறு வேறுபாடு உள்ளது. அதாவது இது ஜாவா தளத்தில் (Java Platform) இயங்குவது.
சிம்பயன் இயங்குதளம் (Symbian OS) நோக்கியா உருவாக்கியவை, இவ்வியங்கு தளம் கொண்ட போன்களை திறன்பேசி (Smart phones) என்று குறிப்பிடுவோம், கணிணி போன்று பல வேலைகள் மற்றும் வசதிகளை கையாள முடியும். அவ்வகையில் சிம்பயன் இயங்கு தளம் கொண்ட நோக்கியா போன்கள் சிரியஸ் 60, 70... சிம்பயன் அன்னா (Series 60, 70... symbian Anna).

தமிழ் மொழி - நோக்கியா கைப்பேசியில் பயன்படுத்துவது பற்றி முக்கியமாக நாம் கவினிக்க வேண்டிய வேறுபாடு யாதெனில், ஜாவா தளத்தில் இயங்கும் (Series 30,40) நோக்கியா அடிப்படை போன்களில், தமிழ் எழுத்துரு (Tamil Fonts) இயற்கையாக நிறுவப்பட்டு வருகின்றன (embedded by default) அப்பேசிகளில் தமிழ் எழுத்துக்களிலேயே மெசேஜ் அனுப்ப்புவத்தை கண்டுள்ளோம். ஆதலால், அப்பேசிகளில் தமிழ் எழுத்துக்கள் அதன் மேய்வானில் இயல்பாகவே இணையப் பயன்பாட்டில் தெரிய வரும், ஆனால் அதில் தமிழிலே தட்டச்சு செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. தற்பொது வரும் சில சிரியஸ் 40 போன்களில், டீபால்ட் பிரவுஸர் (Default Browser) ஒபேரா மினியை (Opera Mini) தந்துவிடுகிறது நோக்கியா, இதில் கைப்பேசியில் பதியப்பட்டிருக்கும் எழுத்துருக்களைக் கொண்டு தமிழ் எழுத்துக்களைக் காண்பிக்காது, ஒபேரா மினியில் ஒரு சிறு மாற்றம் செய்தால், தமிழ் மற்றும் பிற வட்டார மொழிகளை படமாக மாற்றி (Bitmap Image) காண்பிக்கும் (இதற்க்கு about:config என முகவரியில் தட்டச்சு செய்து, உள்ளே செல்ல வேண்டும், Enable bitmap for Complex Scripts என்பதற்க்கு, “YES” என்பதனை அளித்து, சேமிக்க வேண்டும்) அப்பொழுது நமக்கு தமிழ் எழுத்துக்கள் தெரியும், ஆனால் தமிழ் எழுத்துக்களை பதிவிட முடியாது.
இப்பொழுது நாம் முக்கியமாக சுட்டுவது, நோக்கியா சிம்பயன் தளத்தில் இயங்கும், திறன்பேசியில் (Symbian Smart phones) தமிழை பயன்படுத்தும் தேவையை குறிப்பிட்டு தான் இப்பதிவு.

தற்பொது பரவலாக பெரும்பான்மையில் மக்கள் கேள்விப்பட்டுக் கொண்டிருப்பது, ஆண்டிராய்ட் இயங்கு தளம் ( Android Mobile OS) இது பல நிறுவனங்கள் ஏற்றுக் கொண்ட திறந்த கைப்பேசி இயங்குதள உடன்பாடு, இதில் தமிழை அழகாக பயன்படுத்தலாம், அதற்கான எழுத்துருக்கள், செயலிக்கள் (Application aka software) கணிணியில் நிறுவது போல், கிடைக்கின்றன. இது நிற்க, ஆண்டிராய்ட் பற்றி விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்.



நம் தற்போதிய இப்பதிவின் இலக்கு, நோக்கியா சிம்பயன் தளத்தில் தமிழை பயன்படுத்துவதற்க்கு, நாம் நோக்கியாவிடம் விண்ணப்பம் / முர்றையீடு செய்தல், ஏனெனில் தமிழ் பயன்பாட்டு மொழிப் பொதி தற்போது, நோக்கியா சிம்பயன் தளத்திற்க்கு இல்லை, இந்திய மொழிகளுல் இந்தி மற்றும் உள்ளது, இந்திக்கான மொழிப் பொதியை அவர்கள் உருவாக்கும் பொழுது, அவர்கள் தமிழிற்கான மொழித் தொகுப்பையும் உருவாக்க முடியும்.

இதனால் நோக்கியா பயன்படுத்தும் பெரும்பான்மையான பயனாளர்களுக்கு இது உதவும், தமிழை பயன்படுத்த முடியாமல், தங்கலிஷ் / இங்கதமிழை வேறு வழியின்றி பயன்படுத்தி வருகின்றனர்.

http://europe.nokia.com/support/product-support/mobile-dictionary

இச்சுட்டியில் நோக்கிய வழங்கும் மொழித் தொகுப்பினை கானலாம். தற்பொது தமிழ் இல்லை, விரைவில் தமிழை கொண்டுவதற்க்கு, இதனை நோக்கியாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லலாம்.
http://www.change.org/petitions/support-tamil-language-for-symbian

நன்றி !குறுஞ்சுட்டி: http://wp.me/p1rL8W-2B

No comments:

Post a Comment