Pages

Wednesday, 2 November 2011

போலீசுக்கு இப்படியும் ஒரு பிசினஸ்....!

அண்மையில் மேட்டூர் அம்மாபேட்டையில் இரு சக்கர வாகனங்களை திருடி பிடிபட்ட ஒருவனை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்....

அந்தக் களவுத் தொழிலாளி தான் வாகனங்களை திருடுவதே போலீசுக்காகத் தான் என்ற உண்மையைப் போட்டு உடைக்க பொதுமக்களுக்கோ பெரும் அதிர்ச்சி....

"தினம்தோறும் குறைந்தது ஐந்து வண்டிகளையாவது திருடி வா ஒரு வண்டிக்கு ஐநூறு ரூபாய் தருக்கிறோம் என்று போலீஸ்காரங்க என்கிட்டே சொல்லுவாங்க...


நான் வண்டியத் திருடி போலீஸ்ல தந்திருவேன். அவங்க வண்டிக்கு சொந்தக்காரன்ககிட்ட ஐந்தாயிரம் வாங்கிகிட்டு அந்த வண்டியத் தேடிக் கண்டுபிடிச்சதா சொல்லிக்குவாங்க.

நாலாயிரத்தைநூறை அவங்க வச்சிக்கிட்டு ஐநூறை எனக்குத் தந்து அனுப்பிடுவாங்க....." என்றதாக நீளும் அவன் வாக்குமூலத்தின் காணொளியை நீங்களும் கேட்டுப் புல்லரியுங்களேன்....

No comments:

Post a Comment