Pages

Sunday, 13 November 2011

குழந்தையின் கதறலுக்குக் கல்லும் கரையும் ஆனால், காவலர் மனதோ....?


வட மாநிலத்தில் மனம் கலங்க வைத்த ஒரு நிகழ்வு: 

திருட்டு வழக்கில் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட  ஒருவரை, காவலர்கள் பிடித்து அவரது மனைவி மற்றும் மகனையும் சேர்த்து குடும்பத்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்...

பின்னர் விசாரணை என்ற பெயரில் பிடிபட்டவரை, அவரது குடும்பதினரின் முன்னிலயிலேயே காவலர்கள் வெளுத்துக் கட்டியுள்ளனர்... தனது தந்தை தன்  கண்ணெதிரேயே அடிபடுதைப் பார்த்த சிறுவன் பதறி இருக்கிறான்.

"அப்பாவை அடிக்காதீங்க...!" என்று அந்தச் சிறுவன் பெருங் குரலெடுத்துக் கதறிய போதும் அதைக் கண்டு கொள்ளாமல் போலீசார் அடித்து உதைத்துள்ளனர்....


 ஒரு கட்டத்துக்கு மேல் அதைக் காண சகியாத சிறுவன் தனது தந்தையை அடிக்கவேண்டாம் என்று காவலர் ஓங்கிய தடியை பிடித்து கதற, அந்தக் காட்சியை அங்கு வந்த சமூக ஆர்வலர் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்துத் தற்போது இணையத்தில் உலவ விட்டுள்ளார்.

கல் மனது கொண்டவர்களையும் கலங்க வைக்கும் படம் இது....

ஆனால், அந்தச் சிறுவனின் கதறல் போலீசாரை இரக்கம் கொள்ள வைத்ததா என்று தெரியவில்லை......

படம், தகவல்: சரவணன் 

No comments:

Post a Comment