கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரி போகும் வழியில் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்ற இடத்தில் சுமார் நாற்பது வயது மதிக்கத் தக்க ஆதரவற்ற மனநலம் குன்றிய பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயலுகையில் வாகனம் மோதி கடந்த 18ந் தேதி அதிகாலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
சாலையில் அடிபட்டு இறந்தது ஒரு மனித உயிர் என்பதை அறியாதவர்களாக அந்தச் சாலையில் சென்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் அந்தப் பெண்ணின் சடலம் மீது ஏறியதில் இடுப்புக் கீழ் அப் பெண்ணின் உடல் முற்றிலும் சிதைந்து கூழானது.
நன்றாக விடிந்த பின்பே நடந்த கொடூரத்தினைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் மேலும் அந்த உடல் சிதையாமல் அதன் மீது தென்னங்கீற்று மற்றும் பனை ஓலைகளைப் போட்டு மூடி வைத்தனர். மேலும் வாகனங்கள் ஏறா வண்ணம் சாலை ஓரமாக அந்த சடலம் இழுத்துப் போடப்பட்டது.
சம்பவ இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முற்படவில்லை.
இதை விடக் கொடுமை ஹை வே பெட்ரோல் வாகனத்தில் சாலை பாதுகாப்பினை அந்தத் தேசிய நெடுஞ்சாலை வழியே மேற்கொண்ட போலீசாரும் இதனை கண்டு கொள்ள வில்லை என்பது தான்....
கூழான அந்தப் பெண்ணின் சதை அந்தப் பகுதி நாய்கள் மற்றும் காக்கைகளுக்கு உணவானதை அந்தப் பகுதில் சென்ற அனைவரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சம்பவம் பற்றி செய்தியாளர்கள் படம் பிடிக்கச் சென்ற போதிலும் கூட போலீசார் அங்கு அங்கு வந்து சேரவில்லை.
ஒரு முன்னாள் மனுஷிக்கு நேர்ந்த துயரம்
வார்த்தைகளில் எழுத முடியாத சோகம்....
வாழ்க போலீசாரின் மனித நேயப் பற்று!....
இந்த விபத்தினைப் பற்றிய காணொளி...
மனதினைத் திடப்படுத்திக் கொண்டு பாருங்கள்......

தங்களுடைய படங்கள் மனதை உலுக்குவது என்னவோ உண்மை தான்
ReplyDeleteஆனால், அதன் அடிப்படையை நாம் இங்கு உற்று நோக்க வேண்டி உள்ளது
மனித மனம் மழுன்கடிக்கப்பட்டதற்கான ஆதாரமாகவே இதனைப் பார்க்க முடியும்
தேசிய நெடுஞ்சாலை வந்தாலும் வந்தது
இது போன்ற நிகழ்வுகளுக்குக் குறைவேயில்லாமல் போய்விட்டது
வேகத்தை முன்வைத்து மனிதத்தை மறந்து விட்டோம்
பாவம் காவல் துறை அதிகாரிகள்
சாலையே வாழ்வாகிவிட்ட நிலையில் எத்துணை முறை தான் மனிதத்தைப் போற்றுவது
அரங்கேற்றம் திரைப்படத்தில் பிரமிள பாத்திரம் பேசிய வசனம் நினைவில் அலைமொடுவதைத் தவிர்க்கமுடியவில்லை
இங்கு மரணம் மரத்துப் போனதில் தவறில்லையே
ஊழல் பொய் பித்தலாட்டம் வன்முறை என எல்லாமே திரைப்படங்களில் நைய நையக் காட்டப்படுவதால் வருகின்ற அலட்ச்சியம் தான்
வேகம் வேகம் அது மட்டுமே நெடுஞ்சாலையில் குறிக்கோளாக இருக்கிறது
சக மனிதன் என்னவானாலும் யாருக்கும் எந்த அக்கறையும் கிடையாது
இதற்கென என்ன தீர்வு என சிந்தித்த கணத்தில்
ஹைவே ரோந்துப்பணியில் யார் இருந்தார்கள்
அவர்களது விளக்கம் என்ன
அதன் பின் அதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வழி வகைகளை முதலில் ஏற்படுத்துவது
இது பிற்காலத்தில் குறைந்த பட்சம் அவர்கள் கடமையிலாவது வந்து முடியும்
இப்பொழுதும் அது கடமைப்பட்டியலில் இருக்கலாம்
ஆனால், அதனை எவ்வாறு அமல் படுத்துவது
பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் நினைத்தல் மட்டுமே எது சாத்தியமாகும்
இதனை உரிய மேல்மட்ட அதிகாரிகள், ஆர்வலர்கள் சட்ட வல்லுனர்கள் மற்றும் அமைச்சர்கள் பார்வையில்
பட வைத்து எது குறித்த மக்கள் கருத்தைத் திரட்டலாம்
அதற்கு இந்தக் காணொளி மற்றும் நிழற்படங்கள் ஒரு தொடக்கமாக இருக்கட்டும்
உங்கள் நண்பர்கள் மற்றும் அவர்கள் வலைப்பூவில் ஏற்ற வழி செய்யுங்கள்
நாடு தழுவிய ஒரு இயக்கமாக இது மாறி நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தொண்டு நிறுவனங்களாவது
கடை விரித்து இது போன்ற அகால மரணங்களுக்கு மனித நேயத்துடன் இறுதிச் சடங்கு செய்ய வழி வகுக்கலாம்
தங்கள் மனித மாண்பைப் போற்றும் இச் செயல் போற்றுதலுக்குரியது
மனிதம் வாழ்க
--
V Natarajan Ph D
Professor and Head
Dept of Journalism and Mass Communication
Periyar University, Salem 11
Res: 0427 2345123
Mob:7845185856
எங்கே தொலைந்தது எம் மக்களின் மனித நேயம்?
ReplyDelete