Pages

Tuesday, 8 November 2011

பாஸ் (எ ) பாஸ்கரன்!

அண்மையில் சேலத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன்தான் தான் இந்தப் படத்தில் இருக்கும் பெருந்தகை.


தேர்தல் சமயத்தில் பெண் உதவி ஆய்வாளர் ஒருவரைத் தன்னுடன் தனது காரில் ஏற்றி உலா வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க இவருக்கு ஆளும்கட்சியின் தயவு தேவை என்று அவருடன் இருக்கும் அடிவருடிகள் அறிவுறுத்த, அதனை ஏற்றுக் கொண்ட பாஸ்கரன் தான் பணிபுரிவது காவல்துறையில் என்பதையும் மறந்தவராக துணிகரமான செயல் ஒன்றினைச் செய்தார்.

தாரமங்கலம் பகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் ஆதரவு தரும் முடிவினை எடுத்தனர். அவர்களை அந்த   சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தந்துவிடா வண்ணம் தங்களுடன் கடத்திச் செல்ல அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரால் முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை கேள்விப்பட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தன்னுடைய அதிரடிப்படை சகிதம் வந்திருந்து தனது மேற்பார்வையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் ஆகியோரைக் கொண்டு அ.தி.மு.க. கவுன்சிலர்களைப் பிள்ளைப் பிடிப்பவர்களைப் போல கதறக் கதறத் தூக்கி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் காரில் ஏற்றி அருந்தொண்டாற்றி சட்டம் ஒழுங்கைக் காத்தார்.

அந்த அரிய காட்சிகளே பின்வருபவை.....

தன்னுடைய சிஷ்யர்கள் கவுன்சிலர்களைத் துரத்திப் பிடிப்பதை பாக்கெட்டில் கையை விட்டவாறு மேற்பார்வையிடுகிறார் பாஸ்கரன்.


ஒரு கவுன்சிலரை மடக்கிப் பிடித்துத் தூக்க முயற்சிக்கும் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள்.


"வேடிக்கை பார்க்காம அந்தாள ஒன்றியச் செயலாளர் வண்டியில ஏத்துங்கையா" உத்தரவிடும் பாஸ்கரன்.


பெண் கவுன்சிலர்களும் இதில் தப்ப வில்லை.





"சரி... சரி ... அந்தாளு ஏதோ கத்தி ஊரை கூப்பிடுறான்..... இனி நான் இங்க இருக்கக் கூடாது.." என்றபடி ஜூட் விடும் பாஸ்கரன்.


என்ன செஞ்சி என்ன பிரயோசனம்..... பாஸ்கரனை இப்போ மணிமுத்தாறு பதினோராவது பட்டாலியனுக்கில ட்ரான்ஸ்பர் செஞ்சுட்டாங்க....

நிச்சயம் நம்புங்க காவல்துறை உங்கள் நண்பன்தான்.....!
(உங்கள்னா ஆளுங்கட்சினு அர்த்தம்ங்க..)

No comments:

Post a Comment