நவம்பர் இருபதாந் தேதி பஞ்சாப் குருநானக் ஸ்டேடியத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக்கான கபடிப் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் தங்களை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணியை விளையாடிய வென்று உலக கோப்பையைக் கைப்பற்றின.
உலகக் கோப்பையை வென்ற இந்த வீரர்களுக்கு கிடைத்த கெளரவம் என்ன தெரியுமா? அவமானம் மட்டுமே. உலகக் கோப்பையை வென்றெடுத்த இந்த வீரகளின் வெற்றியை யாரும் மதித்ததாகவேத் தெரியவில்லை. மரியாதை நிமித்தம் அவர்களை ஒரு வாகனத்தில் கூட ஏற்றி அனுப்ப முன்வரவில்லை போட்டியை நடத்தியவர்கள்....
வெற்றி வீரர்களில் பலர் போட்டி முடிந்த பிறகு நடந்தே வீடு சென்றுள்ளனர் எனபது உச்சகட்ட பரிதாபம்.
விளையாட்டு வீராங்கனைகள் தங்கியிருந்த விடுதி அறைகளுக்குக் கூட இந்திய விளையாட்டு நிர்வாகம் வாடகை செலுத்தாததால் விடுதி ஊழியர்களின் கெடுபிடிகளுக்கும் இவர்கள் ஆளாகியுள்ளனர்.
தாங்கள் வென்றெடுத்த உலகக் கோப்பையை இவர்கள்ஆட்டோ ரிக்சா ஒன்றிலேயே வீட்டிற்கு எடுத்துச் சொன்றுள்ளார்கள்.
சில நாட்களுக்கு முன் நடந்த பேருந்து விபத்தில் தங்களுடைய உடைமைகள் எரிந்து நாசமாகிவிட்டதால் ஒரு வார காலமாக தாம் ஒரே உடையுடன் மிகவும் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
ஒரே உடையுடன் ஓரு வாரம் அப்படியிருந்தும் உலககோப்பையை வென்றது இவர்களின் மனதின் உறுதியை பறைசாற்றுகின்றது. இப்படிப்பட்ட வீரர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர உரிய முறையில் கௌரவிக்க அரசுக்கு என்ன தயக்கம்?
இந்தியாவின் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் விளையாட்டுக்குண்டான அங்கீகாரம் கிடைக்கும், அவர்கள் மட்டுமே வீரர்கள் கோடி கோடியாக அவர்களுக்கு ஊதியம் தரப்படும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது.
மற்ற விளையாட்டுகளையும் வீரர்களை இது போன்று அவமதிப்பது தொடர்ந்தால் இனி இந்தியாவில் எந்தப் போட்டிகளிலும் ஆர்வத்துடன் முன்வந்து பங்கேற்கும் போட்டியாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் ஆச்சர்யமில்லை.
No comments:
Post a Comment