எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் புகைப்படங்களைத் தங்களுடைய செய்தி நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு என புகைப்படச் செய்தியாளர்களுக்காக ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லாவிதமான கமிராக்களிலும் பயன்படக் கூடிய விதத்தில் Eye-Fi என்ற பெயருடைய ஒரு புதிய SD மெமரி கார்டு தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு மொபைல் X2 (Mobile X2) என பெயரிடப்பட்டுள்ளது.
மொபைல் X2 மெமரி கார்டினைப் பயன்படுத்தி உங்கள் காமிரா மூலம் நீங்கள் எடுக்கும் படங்கள், மெமரி கார்டினுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Wi-Fi தொடர்பின் மூலம் நேரடியாக உங்களுடைய கணினி மற்றும் புகைப்பட பகிர்வு தளங்ககளில் தானாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும்.
மொபைல் X2 மெமரி கார்டு 8 GB சேமிப்புத் திறனையும் மற்றும் ஒருங்கிணைந்த 802.11n Wi-Fi ஐயும் கொண்டதாக உள்ளது. உங்கள் ஐபோன், ஐபாட், அல்லது Android சாதனத்தின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை நேரடியாக உடனுக்குடன் அனுப்ப துணைபுரிகிறது.
நேரடி முறையில் இந்தச் செயல்பாட்டினைப் பெற நீங்கள் இதற்கென உள்ள Android மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். இதனைக் கொண்டு நீங்கள் உங்களுக்குப் பிடித்த புகைப்படப் பகிர்வு தளங்களில் மொபைல் X2 படங்களை அப்லோடு செய்யலாம்.
மொபைல் X2வின் தற்போதைய சந்தை விலை $ 79,99 .
No comments:
Post a Comment