`பாலை’ திரைப்படம் பார்த்தேன்.இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையை பேசுகிறது இப் படம்.
ஓப்பனிங்க் சீனிலே எந்த அலட்டலும் இல்லாமல் பெருமூச்சோடு தொடங்கும் குரல் ஒன்று கதை சொல்ல ஆரம்பிக்கிறது.. அது அப்படியே காயாம்பூ என்ற கதாப்பாத்திரத்தின் வழியாக காட்சியாக விரிந்து நம்மையும் அவர்களோடு பயணிக்க வைக்கிறது. வழக்கமாக போர்கள் பற்றிய படம் என்றால் பேரரசர்களின் பெருமை பேசுவதாகவே இருக்கும்.
ஆனால் இது எளிய மனிதர்களின் போர். அதை சுவராஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தமிழன். ஓப்பனிங்க் சீனில் கதை சொல்ல ஆரம்பிக்கும் குரல், முதுவன் பாத்திரத்தில் நடித்த பெரியவர், காயாம்பூவாக நடித்த ஷம்மு, ஒளிப்பதிவு, இசை, பாடல், வசனங்கள், சங்க கால தமிழர்களிடையே இருந்த ஆண் பெண் பாகுபாடற்ற சுதந்திரத்தை சொல்லும் காட்சிகள் என படத்தில் பல விசயங்கள் என்னை கவர்ந்தது.
நம்பவே முடியாத க்ராஃபிக்ஸ் சாகச கதாநாயக காமெடிகளை பார்த்து காசை கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலை படத்தைப் பாருங்கள்.. நல்ல அனுபவமாக இருக்கும்.
குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கும் செந்தமிழன் டீமுக்கு வாழ்த்துகள்.
திறனாய்ந்தவர்: கார்ட்டூனிஸ்ட் பாலா...
பாலை திரைப்படத்திற்கு தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும்
ReplyDeleteஇனக்குழு சமுகத்தின் வாழ்வை, தமிழ் திரைப்பட பார்வையாளர்கள் திரையில் காணலாம்...
ReplyDelete