Pages

Friday 24 August 2012

பத்திரிகையாளர் மீது தாக்குதல்......


அன்பார்ந்த பத்திரிக்கையாள நண்பர்களே... 

இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூஸ், சென்னை  ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக புகைப்படம் எடுக்கச் சென்றபோது, பேராசிரியர் பிரகாஷ் மய்யா என்பவரால் தாக்கப்பட்டிருக்கிறார். 


புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூஸ் தாக்கப்பட்டது குறித்து கொடுத்த புகாரை பதிவு செய்ய காவல்துறையோடு கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஆனால், அதே சமயம் ஐஐடி ஹாஸ்டல் வார்டன் அளித்த புகாரின் பேரில், பெண்களை மானபங்கப்படுத்த முயன்றதாக புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூ மீது பொய்யாக வழக்கைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. 

ஆல்பின் மேத்யூசைத்  தாக்கிய பேராசிரியரைக் கைது செய்யாத காவல்துறை, ஐஐடியின் செக்யூரிட்டிகளை மட்டும் கைது செய்துள்ளது. ஏழை உழைப்பாளிகளை கைது செய்யும் காவல்துறை, பேராசிரியர் என்றதும் நடுங்குகிறது.

இன்று இந்த அநியாயத்தை அனுமதித்தால், நாளை பத்திரிக்கையாளர்கள் எல்லா இடங்களிலும் தாக்கப்படுவார்கள். இந்தச் சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டியது நம் கடமை.

Tuesday 21 August 2012

வாண்டுகளுக்காக ஒரு போட்டோ போட்டி....

குழந்தைகள் உலகம் எப்பொழுதுமே அழகானது....சிரிப்பு, சண்டை, கோபம், பெரிய மனுஷத்தனம் என அவர்கள் உலகம் வேறு வகையான வண்ணம்...அந்த வண்ண மயமான வாண்டுகளிடம் ஒரு கேமரா கிடைத்துவிட்டால்.....?

 கேமராவும் கையுமாக வெயில், மழை என வட்டமிட்ட வாலுகள் தாங்கள் பார்த்தது, பிடித்தது, ரசித்தது என தங்கள் உலகத்தை கவிதையாய் வந்து கொட்டினர், பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த உலக ஒளிப்பட நாள்
(புகைப்பட நாள் ) போட்டியில்...

பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவை இணைந்து சிறுவர், சிறுமியர் மற்றும் இளையோருக்காக நடத்திய போட்டிக்குத்தான் குழந்தைகள் இப்படி தங்களது எண்ணங்களை புகைப் படங்களாய் சுட்டுத் தள்ளியிருந்தனர்.

 தொலைவில் இருந்து கஷ்டத்துடன் தலையில் தண்ணீர் சுமந்து வருவது, அதிகாலைச் சூரியன், மாலை வெயில், புதிதாய் மலர்ந்த மலர்....என அவர்கள் எடுத்த ஒவ்வொரு புகைப்படங்களும் ஒவ்வொரு கவிதை..அசைவற்ற அனைத்தும் அவர்களின் கைவண்ணத்தில் உயிர் பெற்றிருந்தன.

சிறு வயதில் இருந்தே புகைப்பட ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் நடந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளும் அவர்கள்முன் பேசிய   சர்வதேச விருதுகள் பெற்ற (சிறந்த புகைப்படங்களுக்காக விக்கிபீடியா, நேஷனல் ஜியாக்ரபி போன்றவற்றிற்காக) ஏ.எம்.சுதாகர், பேராசிரியர் தமிழ்ப் பரிதி, குறும்பட இயக்குநர் ஆண்டோ உள்ளிட்டோரின் கருத்துகளை கூர்ந்து கவனித்தனர்.

 பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப் பரிசும் சிறந்த புகைப்படங்கள் எடுத்த குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. அதில் சில வாண்டுகளிடம் அவர்களின் அனுபவங்களை குறித்து கேட்டோம்....

 சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து வந்திருந்த டி. சுப இலக்கியா, 'எங்க வீட்டுக்கிட்டே பூ எல்லாம் நிறைய பூத்துருக்கும் ரோஜாப் பூ, மல்லிகைன்னு எல்லாமே அழகாய் இருக்கும் தெரியுமா? ரொம்பப் பிடிக்கும் எனக்கு...
ஆனா சாயந்தரத்துலையே எல்லாம் வாடி விடுமா அப்போ எனக்கு மனசே கஷ்டமா இருக்கும்... அதெல்லாம் வாடாம இருந்தா எப்படி இருக்கும்? நினைச்சு பார்த்தாலே சூப்பரா இருக்கும்...அப்படி நினைக்கும் போதுதான் போட்டோவா எடுத்து வச்சுகிட்டா அழகா இருக்குமேன்னு தோணுச்சு...அப்படிதான் போட்டோ பிடிக்க ஆர்வமே வந்துச்சு..எங்க மாமாகிட்ட சொல்லவும் அவரு அவரோட கேனான் கேமராவுல எனக்கு படம் பிடிக்க கற்றுக் கொடுத்தாரு. இங்க போட்டி நடக்கிறதா மாமாதான் சொன்னாரு அதுக்கு எனக்கு பிடிச்ச பூ படத்தையே எடுத்து தந்து இப்போ சிறப்பு பரிசும் பெற்றிருக்கேன் ஜாலி ஜாலி' என்றார்.


பெயருக்கேற்பவே இலக்கியமாய் சின்னப்பம்பட்டி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் சுப இலக்கியாவுக்கு அப்பா இல்லை  அம்மா மட்டுமே.

 பணிக்கனூரில் இருந்து வந்த நாலாம் வகுப்பு சுபா உதயபாரதி 'எனக்கு இயற்க்கை காட்சினா ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டுகிட்டே சூரியன் உதிக்கிறதும் மறையுறதும் சூப்பரா இருக்கும் அதை ரசிச்சுதான் நான் சூரியன் மறையுற போட்டோ எடுத்து இங்க கொண்டு வந்தேன்' என்றார் 'உதய'பாரதி



கன்னந்தேரியில் இருந்து வந்த சேதுநாராயணனோ ,'நீண்ட பனைமரத்தை எடுத்து போட்டிக்கு தந்தவர் அதிகம் பேசவில்லை ஆனால் அவர் படம் பேசியது.

போட்டியில் வென்ற குழந்தைகளுக்கான பரிசுகளை முட்டைக்குள் ஓவியங்களை வரைந்து சர்வதேச புகழ் பெற்ற ஓவியர் மேச்சேரி கிருஷ்ணன் (மேகி), சேலம் பெரியார் பல்கலைக் கழக இதழியல் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் நடராசன் ஆகியோர் வழங்கினர்.






இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ஆர்வத்தினை ஊட்டும் வகையில் தங்களது சிறந்த புகைப்படங்களை சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றத்தினைச் சேர்ந்த செய்தி புகைப்படக் கலைஞர்கள் கண்காட்சியாக வைத்திருந்திருந்தனர்.



சின்ன வயதில் அப்பா வாங்கித் தந்த ஒரு சின்ன கேமரா தான் பிற்காலத்தில் மிக பெரிய இயக்குனர் பாலு மகேந்திராவை உருவாக்கியது. சின்ன வயதில் அந்த கேமராவில் நிறைய படங்களைப் பிடிப்பேன் அந்த ஆர்வம் இன்று வரை தொடர்கிறது என்பார் அவர்.

 அப்படி இந்த போட்டி எதிர்காலத்தில் நிறைய படைப்பாளிகளை உருவாக்கினால் அதுவே உண்மையான வெற்றி அதற்கான விதையை  விதைத்ததாக  இருந்தது இந்த விழா.

ஆக்கம்: தமிழ்

Tuesday 14 August 2012

கூகுளின் புதிய கண்டுபிடிப்பு


கூகுளின் புதிய கண்டுபிடிப்பு - . ஆம் உங்களுக்கு ஏதாவது மெயில் எடுக்க வேண்டுமென்றால் இனிமேல் ஜிமெயிலுக்கு செல்ல தேவையில்லை. என்ன குழப்பமாக இருக்கிறதா -

ஜிமெயில் 43 கோடி சந்தாதாரர்களை கொண்ட மாபெரும் வெப் மெயில் கம்பெனி. இதன் சக்ஸஸ் - பெரிய அளவு மெமரி, ஈஸி செர்ச் எனப்படும் அனுப்பியவரின் பெயர் தெரிந்தால் அல்லது சப்ஜெக்ட் தெரிந்தால் எத்தனை வருட ஈமெயிலும் உங்களுக்கு ஒரு நொடியில் செர்ச் பாரில் போட்டு தெரிந்து கொள்ளலாம். 

நிறைய பேர் கூகுள் செர்ச் இஞ்சின் யூஸ் பன்னுவதை தவிர்க்க முடியாமல் போனதால் கூகுள் புதிதாக ஒரு விஷயம் 1 கோடி பேருக்கு கொடுத்திருக்கிறது. ஆம் இந்த கூகுள் செர்ச்சிலே உங்கள் ஈமெயில் டிஸ்பிளே ஆகும். உதாரணம் நான் ஒரு ஏர்லைன் டிக்கட் கூகுள் செர்ச்சில் தேடினால் வலது பக்கம் நான் தேடும் அந்த ஏர்லைனின் அத்தனை ஈமெயிலையும் காட்டும். இதனால் நாம் மறந்து போனாலும் பழைய ஆஃபர் மற்றூம் விலை போர்டிங் பாஸ் அந்த மாதிரி நிறைய விஷயம் இன்ஸ்ன்டட்டாய் கிடைக்கும். 

ஒரு நண்பரின் சாதனையை பற்றி கூகுள் செர்ச்சில் வந்திருந்தால் உடனே அவரிடைய பர்ஸனல் ஈமெயில் சைட்ல காட்டும். இது நிறைய நேரத்தை குறைக்கும் செயலாய் இருந்தாலும் பொது இடத்தில் பிரவுசிங் செய்யும் போது தயவு செய்து லாக் அவுட் பண்ணிவிட்டு வாருங்கள் இல்லயெனில் உங்கள் சீக்ரெட் எல்லாம் வந்திரும்.

 இந்த ஃபெஸிலிட்டி உங்களுக்கு வேண்டுமென்றால் கூகுளில் ரிக்குவஸ்ட் செய்யலாம் ஆனால் அப்ரூவல் அவங்க கையிலே. எனக்கு தெரிஞ்சு இப்ப டெவலப்பர்ஸ்க்கு மட்டும் தான் தராங்க கிடைச்சா டிரை பண்ணீ பாருங்க ரியலி கூல்.... https://www.google.com/
experimental/gmailfieldtrial -


கூகுள் அப்டேட் - உங்களுக்கு மெயில் வந்திருக்குன்னு அமெரிக்கென் மெயில் (ஏ ஓ எல்) மாதிரி இனிமே சத்தம் வரும் மெயில் வந்தா இன்னையிலிருந்து இதுவும் ஸ்டார்ட்.

கூகுள் அப்டேட் - கூகுளில் வேலை செய்யும் ஆள் இறந்தால் அவரின் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ பத்து வருடம் அரை சம்பளம் தராங்க கூகுள்.....

English Version - Gmail's more than 425 million users already can search within their personal e-mail accounts to find something they need, such as an order from Amazon.com or an airline reservation.
Now, Gmail users who are logged into their accounts will be shown a list of relevant e-mails on Google's main search results page if the correspondence contains a word entered in a search request. Google is initially testing the feature with just 1 million Gmail users who request access to a "field trial." To Request this trial - 
https://www.google.com/
experimental/gmailfieldtrial

தகவல்: நாக் ரவி 

Sunday 12 August 2012

இணையத்தில் இணைக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு


  • பொதுமக்களின் குறைகேட்கும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தற்போது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முகவரி http://cmcell.tn.gov.in/
    இனி இந்த முகவரியில் மக்கள் தங்களின் குறைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.  
இந்தப் புதிய இணையத்தளம் ஆகஸ்ட்  பதின்மூன்றாம் தேதி காலை முதல் செயல்படத் தொடங்குகிறது. 
உங்களது புகார் அல்லது பெட்டிஷனை முதலமைச்சரின் தனிப்பிரிவின் கவனத்துக்கும் நடவடிக்கைக்கும் கொண்டு செல்ல  உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதுமானது. 
இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/)  உங்களுக்கென ஒரு யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து ல்கொண்டு இதனை நீங்கள் பயன்படுத்தலாம். அங்கு தரப்பட்டுள்ள இடத்தில் பெட்டிஷன் கம்பிளெயின்ட் நீங்கள் எழுதலாம்.
 இணையத்தில் புகார் அனுப்பினால் ஆதாரத்துக்கு எனக்கு அக்னாலட்ஜ்மென்ட் கிடைக்குமா என்று கேட்பவர்களுக்கு.... நீங்கள் அனுப்பும் புகாருக்கு அக்னாலட்ஜ்மென்ட்  உடனே உங்கள் மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும். அது போக கைத்தொலைப்பேசிக்கும் ஒப்புதல்  குறுந்தகவல் மூலமாகவும் வரும்.
இந்த இணையத்தைக்  கண்துடைப்பென்றோ  ஒப்புக்கு சப்பான் என்றோ நீங்கள்  நினைக்க வேண்டாம். இந்த முகவரியில்உங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று டிராக் செய்யவும் முடியும்.
 அது போக, இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்தந்த  டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவும்  இயங்குகுறது. 
கடிதம் மூலம்தான் புகாரை அனுப்புவேன் என்று ஒற்றைக் காலில் அடம் பிடிப்பவரா நீங்கள்?...... உங்களுக்கென அஞ்சல் முகவரியும்  இங்கு தரப்பட்டுள்ளது.  
Chief Minister's Special Cell ,Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in