அன்பார்ந்த பத்திரிக்கையாள நண்பர்களே...
இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூஸ், சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக புகைப்படம் எடுக்கச் சென்றபோது, பேராசிரியர் பிரகாஷ் மய்யா என்பவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.
புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூஸ் தாக்கப்பட்டது குறித்து கொடுத்த புகாரை பதிவு செய்ய காவல்துறையோடு கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஆனால், அதே சமயம் ஐஐடி ஹாஸ்டல் வார்டன் அளித்த புகாரின் பேரில், பெண்களை மானபங்கப்படுத்த முயன்றதாக புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூ மீது பொய்யாக வழக்கைப் பதிவு செய்துள்ளது காவல்துறை.
ஆல்பின் மேத்யூசைத் தாக்கிய பேராசிரியரைக் கைது செய்யாத காவல்துறை, ஐஐடியின் செக்யூரிட்டிகளை மட்டும் கைது செய்துள்ளது. ஏழை உழைப்பாளிகளை கைது செய்யும் காவல்துறை, பேராசிரியர் என்றதும் நடுங்குகிறது.
இன்று இந்த அநியாயத்தை அனுமதித்தால், நாளை பத்திரிக்கையாளர்கள் எல்லா இடங்களிலும் தாக்கப்படுவார்கள். இந்தச் சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டியது நம் கடமை.
No comments:
Post a Comment