Pages

Saturday, 31 December 2011

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியின் தகிடுதத்தங்கள்.... மக்களே உஷார்!

ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் செய்த ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ இரண்டு மாதத்திற்கு முன் தான் சிறைக்குச் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி.....


பிரபல தமிழ் நடிகர் சூர்யா பங்கு பெறும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"  என்னும் விஜய் டீவி நிகழ்ச்சியின் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான்.


முதலில் இவர்கள் கேட்கும் கேணத்தனமான கேள்விகளுக்கு பதிலை நீங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்ப வேண்டும். 


தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்முதல் சொல் 
A. நீராரும் B.சீராரும் C.காராரும் D.போராரும் என்பதைப் போன்ற அறிவு விருத்திக்கான கேள்விகள் கேட்கப் படுகின்றன.


இதற்கு பதிலை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பும்போது அதற்குக் கட்டணமாக ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களைத் தொடர்புகொள்ள சில ஸ்பெஷல் நம்பர்கள் உள்ளன. இதில் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேச ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது....




இந்தக் குறுஞ்செய்தி மற்றும் டெலிபோன் கால் மூலமாக மட்டும் இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை சம்பாதிகின்றனர். அதாவது பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம். வீட்டில் மட்டும் இருந்துதான் போன் செய்யவேண்டுமாம். 


அப்போது தானே உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளைக்கான கட்டணம் தானாகவே பில்லில் கூடி விடும்.


 இது லாட்டரி பிஸினஸை விட மிகப் பெரிய கொள்ளை!


ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம்! மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மேல் வருமானம்!!


இதற்காக வக்காலத்து வாங்கும் தமிழ் நடிகருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் என்பதால் நம் மக்கள் இப்படி கொள்ளை அடிக்கப்படுவதில் அவருக்கென்ன கவலை?


தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிர் வருமென சொல்லி முதலில் மிளகாய் அரைத்தாகி விட்டது. இப்போது இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஷல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை!


இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை....
அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்!


இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசைக்  கரியாக்கியேத் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது".


உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்கு இந்த ஸ்பெஷல் நம்பர்? டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுத்திருக்க வேண்டும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்....


தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனைப்  பூட்டி வையுங்கள். குழந்தைகளிடம் போன் செய்ய வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள்.


மொபைல்களைத் தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்....


தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு மக்களுக்கு உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்.


உண்மைகளை அம்பலப்படுத்தும் 
மிமிக்ரி வடிவிலான ஒரு காணொளி...




நன்றி: நாகராஜன் ரவி

1 comment:

  1. ithu chinna vayasula nama kathukuta visayam tham but ithu romba periya thavaru , nan chinna vayathil ota panthayam , q & A game ithelam viliyaduvom atharku parisu Rs:50 allathu oru pencil box ipdi irukum anal antha potiil kalanthu kolla Rs:5 vasuliparkal , 100 stutent kalanthu kondal 100*5=500 parisu vellum nabaruku Rs:50 poti nadathu bavaruku mitham , itha idea than but periya nigalchi , ithu ella idathulum nadakum visayam than., potiil win pannavanuku 1kodi kidikutha atha parunga , ??? antha potiil kalanthu kolla avan selavu 10 to 50 thana ? ? ? aru iruvapan win pannuvan illathananuku Rs:50 loss thats all , intha ulagil ella tholilum ipdi eatho oru poi sollithan nadakum , poi illatha tholila illai

    ReplyDelete