அந்த நகைக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.....
கடை முதலாளி கடை ஊழியர்களிடம் வேலை வாங்கியபடி இருந்தார். வருகை தந்தவர்களை வரவேற்றபடி....
"தம்பி அக்காவுக்கு அந்த புது டிசைன் நெக்லசைக் காட்டு....வாங்கம்மா வாங்க....டேய் அம்மாவுக்கு நேத்து வந்த லேட்டஸ்ட் மாடல் தோடு எடுத்து காட்டு....தங்கச்சிக்கு அந்த வளையல காட்டு...." என்றபடி பிசியாக இருந்தார்.
"எல்லோரும் வாங்க....அக்சய திரிதியை அன்னைக்கு நகை வாங்கினா வீட்டுல செல்வம் கொழிக்கும்ன்னு சொல்லுவாங்க...மற்ற கடையை விட நம்ம கடையில விலை ரொம்ப கம்மி, செய்கூலி சேதாரமெல்லாம் நியாயமா இருக்கும்...." என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லியபடியே இருந்தார்...
அப்போது அவரின் மனைவி கடைக்குள் நுழைந்தாள்...
"வா...நீ எங்கே..இங்கே...."
"இவ என் சித்தி மகள்...ஊர் பாண்டிச்சேரி. அதான் உங்களுக்கு தெரியுமே..நாம கூட கல்யாணம் ஆன புதுசுல இவங்க வீட்டுக்கு போயிருக்கோமே?"
"அட...ஆமா....மறந்தே போயிட்டேன்..என்ன விஷயமா இங்கே வந்திருக்கா..."
"அக்சய திரிதியை அன்னிக்கு நகைகள் வாங்கனும்ன்னு சொன்னா....அதான்...நம்ம கடைக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்."
"அடி பைத்தியக்காரி அதுக்கு இன்னைக்குத்தான் வரணுமா?"
"என்னங்க சொல்றீங்க...அக்சய திரிதியை அன்னிக்கு நகைகள் வாங்கின நல்லதுன்னு சொன்னாங்களே?..."
"நல்லதுதான்...ஆனா உங்களுக்கு இல்லை...நகைக்கடைக்காரங்களுக்கு.... ஆமாடி...இந்த பழைய நகைகளை தள்ளி விட நாங்க கிளப்பிவிட்ட வியாபார உத்திடி இது...இதப்போயி உண்மைன்னு நம்பிக்கு வந்திருக்கா பாரு....அக்சய திரிதியை அன்னிக்கு நிறைய நகைகள் இருக்கறது நல்லதுன்னு நினைச்சா.... எல்லா நகைக்கடைகாரங்களும் விக்காம சேர்த்து வைக்க வேண்டியதுதானே... அப்புறம் எதுக்கு கூவி கூவி விக்கிறோம்...இதுக்கு முன்னாடி புடவைக் கடைக்காரங்க ஸ்டாக்க கிளியர் பண்ண பச்சை புடைவை வாங்குனா நல்லதுன்னு சொல்லி வித்தாங்கல்ல அதுமாதிரி தான் இதுவும்... போ... போயி... சமையலைக் கவனி... நான் சாப்பிட வாறேன்.."
சிந்திக்கவும் நண்பர்களே... உண்மை இது தான்!

No comments:
Post a Comment