Pages

Tuesday, 27 December 2011

‎'கொலவெறி' கோமாளிகள்!


‘வொய் திஸ் கொல வெறி'னு ஒரே ஒரு கொலைவெறி பாட்டைப் பாடி, பலரையும் கொல வெறியோட திரியவிட்டிருக்கற நடிகர் தனுஷ், இன்னிக்கு இந்தியாவே மதிக்கற ஒரு ஆளாயிட்டாரு. சொல்லப் போனா, தேசிய கீதத்தைப் பாடின ரவீந்தரநாத் தாகூருக்குகூட கிடைக்காத மரியாதை, இந்த கொலவெறி கீதத்தைப் பாடினவருக்கு வந்துட்டிருக்கு. இந்தியாவோட முன்னணி பணக்காரர் ரத்தன் டாட்டா துவங்கி... பிரதமர் மன்மோகன் சிங் வரை சந்திக்கற வாய்ப்பு தனுஷுக்கு கிடைச்சுருக்கு. விருந்து கொடுத்து அசத்துறதுக்காக தனுஷை டெல்லிக்கு கூப்பிட்டிருக்காராம் பிரதமர்.


நாட்டுல ஆத்து தண்ணிப் பிரச்னையில ஆரம்பிச்சு, அணு உலை பிரச்னை வரைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்னைங்க கிடக்குது தீர்த்து வைக்கப்படாம. ஆனா, ரொம்ப முக்கியமா தனுஷை கூப்பிட்டு விருந்து கொடுக்கப் போறாராம் பிரதமர்!


விவசாயம் பண்றதுக்காக வாங்கின கடனை திருப்பிக் கட்ட முடியாம லட்சக்கணக்கா விவசாயிங்க தற்கொலை செய்துகிட்டிருக்கற இந்த நாட்டுல, கோமாளித்தனமா 'கொல வெறி'னு ஒரு பாட்டு பாடின ஆளை, பொதுஜனம் மட்டுமில்ல... பிரதமரே தலையில தூக்கி வெச்சுக்கிட்டு கொண்டாடறதுதான் கொடுமையிலயும் கொடுமை!


ம்... எல்லாம் இந்த நாட்டோட சாபக்கேடு!


கருத்து: -ஜூனியர் கோவணாண்

No comments:

Post a Comment