Pages

Saturday, 25 June 2011

நெகிழ வைத்த ஒரு கவிதை : "அப்பா..."

 

அப்பா...

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...


அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...


கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?


சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

26 comments:

  1. everyone has this feeling with ones daddy and you have rightly given words and meaning to it. what a wonderful poem about father. every word is a gem. i could not wait to find tamil transliteration to key in my comments. you have clouded my eyes.

    ReplyDelete
  2. அம்மாவிடம்
    பாசத்தையும்
    அப்பாவிடம்
    நேசத்தையும்
    இன்றே உணர்த்துங்கள்
    சில நாளைகள்
    இல்லாமலும் போகலாம்...

    வாழ்வின் சத்தியமான வரிகள் இவை.
    இந்தக் கவிதை
    என் கண்களை குளமாக்கியது மட்டுமல்லாமல்
    கதறி அழவும் வைத்தது.

    கண்களில் நீர்ப் பொழிவு
    இன்னமும்
    கட்டுக்கு வரவில்லை

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வரிகள்... என் தந்தைக்கு சமர்ப்பணம்

      Delete
    2. அம்மாவிடம் பாசத்தையும்
      அப்பாவிடம் நேசத்தை
      யும்இன்றேஉணர்த்துங்கள்
      சில நாளைகள் இல்லாமல்
      போகலாம் எத்தனை உண்மையான வரிகள்

      Delete
    3. அருமை பதிவு

      Delete
  3. நெஞ்சை நிறைக்கும் படைப்பு

    ReplyDelete
  4. super kavithai I really like this.very touchable.

    ReplyDelete
  5. மிகவும் இனிது ...

    ReplyDelete
  6. enna azavacha kavithai sir U r Great

    ReplyDelete
  7. உங்கள் கவிதையை என் அப்பாவிற்கு காணிக்கை ஆக்குகின்றேன். நன்றி.

    ReplyDelete
  8. என் தந்தைக்கு சமர்ப்பணம்...நன்றி.

    ReplyDelete
  9. மிகவும் அருமை... வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. Whom Do you like most daddy, or Mummy? asked my Neighbour. My son replied when he was a kid, I like daddy, I like mummy. both.

    ReplyDelete
  11. இருக்கும் போது தெரியவில்லை அருமை அவர்கள் இல்லாத போது தெரிந்தது அவர்களின் இணையயற்ற பெருமை

    ReplyDelete
  12. நல்ல பதிவு.நன்றி.

    ReplyDelete
  13. தந்தை இழப்பிற்கு பின் தோன்றும் இந்த வலி ஒரு போதும் தந்தையிடம் காட்டியதில்லை உடன் இருந்தால் கடவுளின் நிலையும் இதுதனோ இதனால் தானோ ஏனோ கடவுள் நம்மை இப்போது அழவைக்கிறான்.

    ReplyDelete
  14. This kavitha dedicate to my father.. I miss you dad..😥

    ReplyDelete
  15. இழப்பினது பின் தோன்றும் உண்மையான மனவரிகள் ..

    ReplyDelete