சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றமும், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறையும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் ஒன்றினை சேலத்தில் ஜூன் 24ந்தேதி நடத்தியது.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் கி.முத்துச்செழியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய துணைவேந்தர் பல்கலைக் கழகம் ஒன்றும், செய்தியாளர்களும் இணைந்து இது போன்ற நிகழ்ச்சியினை நடத்துவது தமிழகத்திலேயே இது முதல்முறை என்று பெருமையுடன் குறிப்பிட்ட அவர் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உருவாகும் விதத்தில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது "சமுதாய வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்தி வருகிறது. கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியதும் பத்திரிக்கைத் துறையே ஆகும். இந்த துறையில் இருந்துதான் பல்வேறு துறைககளின் ஆராய்ச்சியாளர்கள் உருவாகி இருக்கின்றனர். ஆராய்ச்சித் துறையில் ஊக்கத்தையும், ஆக்க சிந்தனையையும் வளர்க்க பத்திரிகைகள் உறுதுணையாக இருக்கின்றன.
தற்போது பல நிகழ்வுகளை வெளிக்கொண்டு வந்தததில் ஊடங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடும் முன்னர் அந்த செய்தியின் நன்மை குறித்து செய்தியாளர்கள் நன்கு ஆராய்ந்து வெளியிட வேண்டும். அதில் உண்மைத் தன்மையை அப்படியே மக்களிடம் கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். மற்ற செய்திகளை ஒப்பிடுகையில் கல்வி சம்மந்தப்பட்ட செய்திகள் குறைவாகவே வெளிவருகிறது. எனவே பத்திரிக்கைகள் கல்வி குறித்த செய்திகளை மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் வெளியிட வேண்டும். கல்வியில் மேலும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்கும் விதத்தில் செய்திகள் வெளியிட வேண்டும். பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை பத்திரிக்கையாளர்கள் வெளியிடுகையில் அது குறித்து நன்கு ஆராய்ந்து வெளியிட வேண்டும்.
பெரியார் பல்கலைக் கழக வளர்ச்சிக்கு பத்திரிக்கையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து மேலும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்த ஆவலாக உள்ளோம். அந்த வகையில் இன்று நடக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு இனிய தொடக்கமே" என அவர் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் வி.நடராஜன்,
இணைப் பேராசிரியர் எஸ்.நந்தகுமார்,
உதவிப் பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி,
உதவிப் பேராசிரியர் ஆர்.சுப்பிரமணி
ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
விழாவில் துணைவேந்தர் முத்துச்செழியனுக்கு கேடயம் மற்றும் நினைவுப்பரிசு, பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறைப் பேராசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் ஆகியவை சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றத்தினரால் வழங்கப்பட்டன.
பல்வேறு புகைப்படப் போட்டிகளில் பங்கேற்று அகில இந்திய அளவில் முதல் பரிசுகள் பிற பரிசுகள் என வாங்கிக் குவித்த புகைப்படக் கலைஞர் மற்றும் செய்தியாளர் சுதாகரனுக்கு ஊக்கப்பரிசினை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துச்செழியன் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த விழாவில் சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றத்தின் தகவல் தொடர்புக்காககப் பின்னப்பட்டிருக்கும் வலைப்பூவை துணைவேந்தர் மடிக்கணினியை இயக்கி தொடக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.
ஆக்கப்பூர்வமான பல்வேறு செய்திகளை ஊடகவியலாளர்களுடன் பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறையினர் கலந்துரையாடி பரிமாறிக் கொண்டனர்.
புத்தாக்கப் பயிற்சி முகாம் நோக்கம் இந்த நிகழ்ச்சியால் முழுமையடைந்தது என்பதில் ஐயமில்லை...
*********
SDPC’s E.mail Id : salemdistpressclub@gmail.com

the legend for the photos and the choice of photos are quite nice. i appreciate the good work. we will keep the flame live by working towards the betterment of the professional journalists, journalism educators and the general public.
ReplyDeletenatarajan v. jmc. pu. slm