Pages

Wednesday 29 June 2011

போலி பத்திரிகையாளர்கள்: எச்சரிக்கை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ந்தேதி செய்தியாளர்களுக்கு  சென்னை நகர போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகித்த, கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா,  இன்னொரு கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

"தியாகராயநகரில் கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் வேடத்தில் வாகன ஸ்டிக்கர்களை மோட்டார் சைக்கிளில் ஒட்டிக்கொண்டும், பத்திரிகையாளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டும் வக்கீல்கள் பயன்படுத்தும் வாகன ஸ்டிக்கர்களை மோட்டார் சைக்கிளில் ஒட்டிக்கொண்டும், வக்கீல்கள் போலவும்,  பத்திரிகையாளர்கள் போலவும் வேஷமிட்டு செயல்பட்டு வந்த ஒரு வழிப்பறி கொள்ளை கும்பலை கைது செய்துள்ளோம். அவர்கள் பயன்படுத்திய போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி வாகன ஸ்டிக்கர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோல் பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், டாக்டர்கள் போர்வையில் சமூகவிரோத குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது போலீசாருக்கு, பத்திரிகையாளர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்தனர்.

 தமிழ்நாடு முழுதும் இது போன்ற போலிகள் இன்றும் எந்த பயமும் இல்லாமல் சுதந்திரமாக உலா வந்தவாறு உள்ளனர். ஆண்டு தோறும பெருகி வரும் இந்த போலிகளை முழுமையாக ஒழித்து கட்ட எந்த அதிகாரியும் முன் வருவதில்லை என்பதுதான் வேதனை.

 சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வகித்தவர்களுக்கும், போலீஸ் கமிஷனர், எஸ்.பி போன்ற காவல் அதிகாரிகளுக்கும் சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரும் வேண்டுகோளும் பல முறை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவவரை எந்த விதமான நடவடிக்கைகளும் என்ன காரணத்தாலோ எடுக்கப்படவே இல்லை.

 களைகளைக் களைந்து பயிர்களைக் காப்பது போல் போலிகளைக் களைந்து இச் சமுதாயத்தினைக் காத்திடும் தலையாய கடைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு உள்ளது என்பதை இதன் மூலம் நினைவூட்டுகிறோம்.

No comments:

Post a Comment