பசுமை காக்கும் முயற்சியில் சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதற்காக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
சுற்றுச் சூழல் காக்கும் தங்களின் இந்த முயற்சிகளுக்கு பொதுநல அமைப்புகளையும் உடன் சேர்த்துக் கொண்டு, இலவசமாக மரக்கன்றுகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தந்து மாணவர்களிடையே மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அதன் துணைவேந்தர் திரு முத்துச் செழியன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நற்பணி தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றத்தினரால் செய்யப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு நிகழ்வாக கடந்த டிசம்பர் 29ந் தேதி சேலம் மாவட்டம் குப்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும்விழாவினை சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் தன்னுடன் நுகர்வோர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினைச் சேர்த்துக்கொண்டு நடத்தியது.
நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் அவர்களது ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் மகிழ்வுடன் பங்கேற்றனர். மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் மரக்கன்று நாடும விழாவில் நடத்தப்பட்டது.
குப்பனூர் பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் விழாவின் புகைப்படத் தொகுப்பு இதோ....
No comments:
Post a Comment