இணையத்தில் இணைக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு
பொதுமக்களின் குறைகேட்கும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தற்போது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முகவரி http://cmcell.tn.gov.in/
இனி இந்த முகவரியில் மக்கள் தங்களின் குறைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.
இந்தப் புதிய இணையத்தளம் ஆகஸ்ட் பதின்மூன்றாம் தேதி காலை முதல் செயல்படத் தொடங்குகிறது.
உங்களது புகார் அல்லது பெட்டிஷனை முதலமைச்சரின் தனிப்பிரிவின் கவனத்துக்கும் நடவடிக்கைக்கும் கொண்டு செல்ல உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதுமானது.
இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/) உங்களுக்கென ஒரு யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து ல்கொண்டு இதனை நீங்கள் பயன்படுத்தலாம். அங்கு தரப்பட்டுள்ள இடத்தில் பெட்டிஷன் கம்பிளெயின்ட் நீங்கள் எழுதலாம்.
இணையத்தில் புகார் அனுப்பினால் ஆதாரத்துக்கு எனக்கு அக்னாலட்ஜ்மென்ட் கிடைக்குமா என்று கேட்பவர்களுக்கு.... நீங்கள் அனுப்பும் புகாருக்கு அக்னாலட்ஜ்மென்ட் உடனே உங்கள் மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும். அது போக கைத்தொலைப்பேசிக்கும் ஒப்புதல் குறுந்தகவல் மூலமாகவும் வரும்.
இந்த இணையத்தைக் கண்துடைப்பென்றோ ஒப்புக்கு சப்பான் என்றோ நீங்கள் நினைக்க வேண்டாம். இந்த முகவரியில்உங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று டிராக் செய்யவும் முடியும்.
அது போக, இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்தந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவும் இயங்குகுறது.
கடிதம் மூலம்தான் புகாரை அனுப்புவேன் என்று ஒற்றைக் காலில் அடம் பிடிப்பவரா நீங்கள்?...... உங்களுக்கென அஞ்சல் முகவரியும் இங்கு தரப்பட்டுள்ளது.
Chief Minister's Special Cell ,Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in
No comments:
Post a Comment