Pages

Monday, 25 March 2013

"நேரத்தை ஒதுக்குங்க" - செய்தியாளர்களுக்கான பயிலரங்கம்.

செய்தியாளர்களின்  உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்திலான பயிலரங்கம் ஒன்றினை நேரத்தை ஒதுக்குங்க என்ற தலைப்பில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் கடந்த 10ந்  தேதி ஏற்பாடு செய்திருந்தது.


சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சேலம் செய்தியாளர் அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத் துணைத் தலைவர் பெ.சிவசுப்ரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


மூத்த செய்தியாளர்  முரசொலி திருவேங்கடம் முன்னிலை வகித்தார்.


தூர்தர்ஷன் செய்தியாளர் ஜி.விஜயகுமார் அறிமுக உரை நிகழ்த்தினார்.


சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத் துணைத் தலைவர் வை.கதிரவன் சிறப்பு அழைப்பாளரான முனைவர்.எஸ்.கதிரவனுக்குப் பொன்னாடை போர்த்தினார்.


மூத்த செய்தியாளர்  இளங்கோவன் சிறப்பு அழைப்பாளருக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பெரியார் பல்கலைக் கழக உளவியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.கதிரவன் செய்தியாளர்களுக்கு ஏற்படும்  மன அழுத்தம் பற்றியும், அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்புவது எப்படி என்பது பற்றியும் பயனுள்ள வகையில் பயிலரங்கதினை சிறப்புற நடத்தினார்.





இந்த பயிலரங்கத்தில் சில செயல்முறை விளக்கங்களை செய்தியாளர்களைக் கொண்டே முனைவர் கதிரவன் நடத்தினார்.




நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களின் சந்தேகங்களுக்கு முனைவர்  விளக்கமளித்தார்.








இறுதியாக பிரஸ் கிளப் சேலம் அமைப்பின் தலைவர் ரத்தினகுமார் நன்றி கூற விழா இனிது நிறைவு பெற்றது.


No comments:

Post a Comment