ஊடக உலக நண்பர்களே !.....
ஊடக உலக நண்பர்களே !
இலங்கை மண்ணில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இனப் பிரச்னையின்போது கடினமான சூழ்நிலைகளில்கூட நிகழ்வுகள், தகவல்களை வெளி உலகிற்கு கொண்டு சென்ற மகத்தான பணிகளை மேற்கொண்டவர்கள், மேற்கொண்டு வருபவர்கள் பத்திரிகை மற்று ஊடகவியலாளர்கள். ஆனால் ...இந்த முயற்சிகளின்போது கொல்லப்பட்டவர்கள் 45 பேருக்கும் அதிகம். காணாமல் போனவர்களும் ஏராளம். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மொழி வேறுபாடின்றி பத்திரிகையாளர், ஊடகவியலாளர்கள் என்ற ஒரே பார்வையில் அவர்களை நாம் பார்க்கிறோம்.
சர்வதேச நாடுகள் இலங்கை இனப்பிரச்னை தொடர்பாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை மண்ணில் பத்திரிகை....ஊடகவியலாளர்களின் நிலை இன்னமும் கைகள் கட்டப்பட்டு, கண்களும், காதுகளும் மூடப்பட்ட நிலையில்தான் உள்ளது. ஊடகங்கள் தணிக்கை செய்யபடுகின்றன அல்லது இடையூறு செய்யபடுகின்றன. சமீபத்தில் பி.பி.சி வானொலி கூட தனது கூட்டு ஸ்தாபன சேவையை நிறுத்தி கொண்டுவிட்டது.
இத்தகைய சூழலில் ஊடகங்களுக்கு எதிரான போரை இலங்கை அரசு உடனே நிறுத்தக்கோரியும்...ஊடகவியலாளர்கள் கொலைகள், காணாமல்
போனவர் பற்றி சர்வதேச விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதற்கு இந்திய அரசும், சர்வதேச சமூகமும், ஐ.நா., மன்றமும் நடவடிக்கை மேற்கொள்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பத்திரிகையாளர்கள் சார்பில் போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த போராட்டங்களுக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்று தெரியும்...அதே சமயம் அஹிம்சை வழியில் நடத்தப்படவுள்ள இந்த போராட்டங்களுக்கு, போராட்ட வடிவம் குறித்த உங்களின் ஆலோசனைகளை வரவேற்கிறோம்.
ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு பத்திரிகையாளர் ஒருங்கிணைப்பு களம்
(JOURNALISTS FORUM OF TAMILNADU)
03.04.2013. சென்னை.
No comments:
Post a Comment