கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 26ம் நாள் வியாழனன்று சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் "ஊடகத் துறையில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் மாணவியருக்கான சிறப்புக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்ற துணைத் தலைவர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
ஊடகத் துறையில் நெடிய அனுபவம் கொண்ட சாதனைப் பத்திரிகையாளரான திரு.சிவசுப்பிரமணியன் தன்னுடைய பத்திரிகைத் துறை அனுபவங்களை மாணவியரிடத்தில் எடுத்தியம்பி அந்தத் துறை குறித்தான ஆர்வத்தினை அவர்களிடத்தில் ஏற்படுத்தினார்.
அடுத்து ஊடகத் துறையில் பெண்களின் பங்கு எத்தகையது என்பதனை அவர்களிடத்தில் விரித்துக் கூறி பத்திரிகையாளராகப் பெண்கள் எப்படியெல்லாம் பரிமளிக்க முடியும் என்பதனையும் அவர் கூறியது மாணவியர் கருத்துக்கு நல்விருந்தாக அமைந்தது.
ஊடகத்துறை தொடர்பாக மாணவியர் எழுப்பிய வினாக்களுக்கு திரு.சிவசுப்பிரமணியன் விளக்கமளித்து அவர்களது ஐயத்தினைப் போக்கினார்.
மாணவிகளுக்கு இந்த நிகழ்வு ஊடகத்துறை தொடர்பான நல்லதொரு தெளிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது....
படங்கள்: ச.இளங்கோவன்
No comments:
Post a Comment