Pages

Tuesday 10 April 2012

Gmailல் Spamற்கு வரும் மின்னஞ்சல்​களை தானாகவே நீக்குவதற்​கு


சிறந்த மின்னஞ்சல் சேவையை வழங்கும் ஜிமெயிலில் சில சந்தர்ப்பங்களில் Spam பகுதிக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதுண்டு. இம் மின்னஞ்சல்களில் கணினி வைரஸ்களும் சேர்த்து அனுப்பப்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.


எவ்வாறெனினும் இதற்கு வரும் மின்னஞ்சல்களை படிப்பதற்கு பலரும் நாட்டம் காட்டுவதில்லை. அதிக அளவில் வரும் இவற்றை பார்வையிடாது தானாகவே முற்றாக நீக்குதற்கு பின்வரும் முறைகளை கையாள்க.


1. உங்கள் மின்னஞ்சல் கணக்கினுள் நுழைந்து வலது புறத்தில் காணப்படும் Gmail Settingsற்கு செல்லவும்.


2. அதன்பின் தோன்றும் Filters படிவத்தில் Create a New Filter என்பதை தெரிவு செய்யவும்.


3. தொடர்ந்து தோன்றும் படிவத்தில் Has the Words என்பதில் “in:spam” என டைப் செய்து Create Filter with this Searchஐ கிளிக் செய்து OK கொடுக்கவும்.


4. அதன் பின் தோன்றும் விண்டோவில் Delete it  என்பதை தெரிவு செய்து, தொடர்ந்து Apply filter என்பதை கிளிக் செய்து Create Filter என்பதை அழுத்தவும்.

No comments:

Post a Comment