தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் 32ஆண்டு காலம் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு.ரவி அவர்களுக்கு செப்டம்பர் 28ந்தேதி மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பாராட்டு விழா நடந்தது.
சென்னைபத்திரிகையாளர்கள் மன்றம் நடத்திய இந்தப் பாராட்டு விழாவில் பத்திரிகையாளர் சார்பில் திரு.ரவி அவர்களுக்கு வீரவாள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை பொதுமேலாளர் பிரபாகரன் மலர்கிரீடத்தை அணிவித்து திரு.ரவி அவர்களுக்கு வீரவாளைவழங்கினார். அருகில் ரவியின் குடும்பத்தினருடன் சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதிதமிழன் ஆகியோர் உள்ளனர் .
திரு.ரவி அவர்களுக்கு சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்துகளைத் தெரிவித்து வணங்கி மகிழ்கிறது!
தகவல்: எஸ்.இளங்கோ
No comments:
Post a Comment