Pages

Thursday 7 February 2013

எங்களது சாதனைப் பயணத்தின் மைல் கல்!

நினைத்துப் பார்க்கவே 
பரவசமாக இருக்கிறது..... 

சேலத்தில் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கான கம்பீரமான கணினி மயமாக்கப்பட்ட பணிமனை, கூட்ட அரங்கம், செய்தியாளர் அறை, நூலகம் போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதான செய்தியாளர் வளாகம் ஒன்று உருவாகியுள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் நவீன தொழில்நுட்பத்தோடு ஏறத்தாழ 15 லட்ச ரூபாய் செலவில் இந்த வளாகம்  உருவானதின் பின்னணியில்  சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்துக்குக் கணிசமான பங்களிப்பு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

2011ல் சேலம் செய்தியாளர்களுக்கென சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் தனியாக அறை எதுவுமே ஒதுக்கப்படவில்லை. பல மாதங்களாக மாவட்ட நிர்வாகமும் இதைப்பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் தான் இதற்காக கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தி ஆட்சியரின் கவனத்துக்கு இதனை எடுத்துச் சென்றது.

செய்தியாளர் நலன் கருதி நடந்த போராட்டம் என்ற போதிலும் நமது அமைப்பைத் தவிர வேறு யாரும் இதில் பங்கேற்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நமது போராட்டம் சேலம் ஆட்சியர் திரு மகரபூஷணத்தின் கவனத்தை ஈர்க்கவே நமது கோரிக்கையை ஏற்று செய்தியாளர்களுக்கென தனி அறையை ஒதுக்கித் தரும்படி உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடிக்கப்படாமல் இருந்த பழைய கட்டிடம் ஒன்றின் மாடி நமக்கான அறையாக ஆட்சியரால் ஒதுக்கப்பட்டது. எந்தவிதமான வசதிகளும் இல்லாமல் காணப்பட்ட அந்த அறையை பல்வேறு வசதிகளுடன் கூடிய செய்தியாளர் வளாகமாக மாற்றிக் காட்டுவது என்று சூளுரைத்து அதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் இறங்கியது நமது அமைப்பு. 

இந்த சமயத்தில் நம் முயற்சியின் மேல் நம்பிக்கை வைத்து இன்னொரு சகோதர அமைப்பும் நம் முயற்சியில் இணைய முன் வந்தது. பெரிய தொகையை செலவழித்தால் மட்டுமே செய்தியாளர்களுக்கான தனி வளாகம் சாத்தியம். ஆனால் நம்மிடமோ சொல்லிக் கொள்ளும் விதத்தில் நிதி நிலைமை இல்லை. 


2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதற்காக ஒரு முயற்சியை நாம் மேற்கொண்டோம்.

சென்னையில் இருப்பதைப் போன்று சேலத்தில்  பத்திரிகையாளர்களுக்கான ஒரு வளாகத்தை ஏற்படுத்தித் தர உங்களால் மட்டுமே முடியும் என்று நாம் சேலம் விநாயகா மிஷன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழக     வேந்தர் திரு சண்முகசுந்தரத்தை அணுகி வேண்டினோம். 


நமது வேண்டுகோளுக்கு செவிமடுத்த விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழக வேந்தர் "உங்களது கோரிக்கையை நான் ஏற்கிறேன்; உங்களுக்கான அறையை அழகுற அமைத்துத் தருவது என்பொறுப்பு" என்று கூறி இன்ப அதிர்ச்சியினைத் தந்தார்.

உடனடியாக தன் உதவியாளர் திரு ராவணனை அழைத்து செய்தியாளர் அறையை  அமைத்துத் தருவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.          2012ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து இதற்கான வேலைகள் தொடங்கி  நடந்தன. 


இந்த நிகழ்வை நினைவு கூறும் விதத்தில் அந்த கட்டடத்துக்கு முன்பாக இருந்த மைதானத்தின் ஒரு ஓரத்தில் வரிசையாக மரக் கன்றுகள் நம்மால் நடப்பட்டன.


இப்படியாகத் தொடங்கப்பட்ட வேலைகள்.....



இப்படியாக நிறைவு பெற்றுள்ளன....!




தனக்குத் தொடர்ந்து பல்வேறு பணிகள் இருந்த போதிலும் செய்தியாளர் அறைக்கான வேலைகள் பற்றி அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த கட்ட உத்தரவுகள்  விநாயகா மிஷன்ஸ் வேந்தரால் பிறப்பிக்கப்பட்டு வந்தன. 

நிதான கதியில் அதே நேரத்தில் பாங்குற நடந்த பணிகளின் விளைவாக இன்று சேலத்தில் செய்தியாளர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இடத்தை ஒதுக்கித் தந்த ஆட்சியருக்கும், வளாகத்தை உருவாக்கித் தந்த விநாயகா மிஷன்ஸ் வேந்தருக்கும் நமது நன்றிகளை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது....

வரும் பிப்ரவரி ஒன்பதாம் நாளன்று இந்த வளாகம் சீரும் சிறப்புடன் திறக்கப்பட உள்ளது. 

அதற்கான அழைப்பிதழ் இதோ.... 



வாருங்கள்! 
வந்து எங்களை வாழ்த்துங்கள்...!!

No comments:

Post a Comment