உலக மகளிர் நல அமைப்பு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக அரங்கில்
21-04-2013 அன்று நடத்திய ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கின் போது
சமூக சேவை ,ஆவணப்பட இயக்கம், பாரத நாட்டியம், ஓவியம், இசை உட்பட பல துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் சேலம் புகைப்படக் கலைஞர் திரு ஏ .எம் .சுதாகரின் திறமையைப் பாராட்டி " நவரசக் கலைமணி " என்ற விருது வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இந்திரா கல்வி நிறுவனங்களின் குழுமத் தலைவர் திரு.வி .ஜி.ராஜேந்திரன் விருதினை திரு ஏ .எம் .சுதாகருக்கு வழங்கினார்.
சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் சார்பில்
நாமும் அவரைப் பாராட்டி வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment