Pages

Thursday, 30 June 2011

பத்திரிகையாளர்கள் படிக்க அருமையானதொரு ஆங்கில நூல்


Was the 2000 presidential campaign merely a contest between Pinocchio and Dumbo? And did Dumbo miraculously turn into Abraham Lincoln after the events of September 11? In fact, Kathleen Hall Jamieson and Paul Waldman argue in The Press Effect, these stereotypes, while containing some elements of the truth, represent the failure of the press and the citizenry to engage the most important part of our political process in a critical fashion. The authors analyze both press coverage and public opinion, using the Annenberg 2000 survey, which interviewed more than 100,000 people, to examine one of the most interesting periods of modern presidential history, from the summer of 2000 through the aftermath of September 11th.

How does the press fail us during presidential elections? Jamieson and Waldman show that when political campaigns side-step or refuse to engage the facts of the opposing side, the press often fails to step into the void with the information citizens require to make sense of the political give-and-take. They look at the stories through which we understand political events--examining a number of fabrications that deceived the public about consequential governmental activities--and explore the ways in which political leaders and reporters select the language through which we talk and think about politics, and the relationship between the rhetoric of campaigns and the reality of governance. They explore the role of the campaigns and the press in casting the 2000 general election as a contest between Pinocchio and Dumbo, and ask whether in 2000 the press applied the same standards of truth-telling to both Bush and Gore. The unprecedented events of election night and the thirty-six days that followed revealed the role that preconceptions play in press interpretation and the importance of press frames in determining the tone of political coverage as well as the impact of network overconfidence in polls.
The Press Effect is, ultimately, a wide-ranging critique of the press's role in mediating between politicians and the citizens they are supposed to serve.

நூல் தரவிறக்கத்துக்கான முகவரி:






Wednesday, 29 June 2011

சேலம் மாவட்ட நிர்வாகத்துக்கு ஊடகவியலாளர்களின் கண்டனம்....


சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பெறும் அரசுத் துறை சார்ந்த கூட்டங்களுக்குப் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதும், ஊடகங்கள் சார்பில் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டு செய்தி சேகரித்து பொதுமக்களுக்கு அந்த கூட்டம் தொடர்பான செய்திகளை அறியச் செய்வதும் வழக்கம்.

ஆனால், கடந்த சில நாள்களாக சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு முந்தைய நாளில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டாலும் மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று செய்தி சேகரிக்க செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்கும் செய்தியாளர்கள் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுவிடுவார்களோ, அரசுக்கு இது தெரிய வந்தால் தங்களுக்கு பாதிப்பு நேர்ந்து விடுமோ என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் இது போன்ற நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தெரிகிறது.

கூட்டம் முடிவடைந்த பிறகு அந்த கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், முழுவதும் அரசுக்கு சாதகமாகவும், மாவட்ட நிர்வாகத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் கூறுகள் மட்டுமே பத்திரிகைச் செய்தியாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலம் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.   

கடந்த ஜூன் 29ந்  தேதி  புதன்கிழமை காலை சேலம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம், மகளிர், குழந்தை கடத்தல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றில் செய்தி சேகரிக்க வருமாறு மக்கள் தொடர்பு அலுவலரால் தாங்கள் எஸ்.எம்.எஸ்  மூலம் அழைக்கப்பட்டதால் அங்கு சென்ற செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷனத்தால் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷனம்

அழைப்பு வந்ததால் தான் வந்துள்ளோம்  என்று கூறி கூட்ட அரங்கிற்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலக ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

‘உங்களுக்கு ஆட்சியரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் தலைமையில் நடைபெறும் எந்த கூட்டத்துக்கும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி இல்லை’ என்று ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்  தெரிவித்து உள்ளனர். எஸ்.எம்.எஸ்  தந்து செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களை வரவழத்த மக்கள் தொடர்பு அலுவலர் திரு.லிங்கம் இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.

பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்ட சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில், கடந்த காலங்களில் இருந்த ஆட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்களின் தரப்பில் இருந்தும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளைப் பெற்று வந்தனர். ஆனால், இப்போதோ மக்கள் பிரச்னை தொடர்பான கூட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதையே தடுத்து மிகப் பெரிய இடைவெளியை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர்.

நேர்மையான நல்லதொரு நிவாகம் தன்னால் தரப்பட வேண்டும் என்ற உறுதிப் பாட்டுடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கு இது போன்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் இடையூறாகவே அமையும்.

இது போன்ற மோசமான ஒரு நிகழ்வு இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை. தாங்கள் அவமதிக்கப்பட்டது மோசமான ஒரு நிகழ்வு என்றே  ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஜனநாயகத்துக்கு எதிரான இது போன்ற நிகழ்வுகளை, பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடும் அதிகாரிகளின் சர்வாதிகாரப்போக்கை சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இனி வரும் காலங்களில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை  சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

**************************************************************************************

30-06-2011 தேதியிட்ட காலைக்கதிர் நாழிதழில் வெளியான செய்தி.

 **************************************************************************************

போலி பத்திரிகையாளர்கள்: எச்சரிக்கை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ந்தேதி செய்தியாளர்களுக்கு  சென்னை நகர போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகித்த, கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா,  இன்னொரு கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

"தியாகராயநகரில் கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் வேடத்தில் வாகன ஸ்டிக்கர்களை மோட்டார் சைக்கிளில் ஒட்டிக்கொண்டும், பத்திரிகையாளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டும் வக்கீல்கள் பயன்படுத்தும் வாகன ஸ்டிக்கர்களை மோட்டார் சைக்கிளில் ஒட்டிக்கொண்டும், வக்கீல்கள் போலவும்,  பத்திரிகையாளர்கள் போலவும் வேஷமிட்டு செயல்பட்டு வந்த ஒரு வழிப்பறி கொள்ளை கும்பலை கைது செய்துள்ளோம். அவர்கள் பயன்படுத்திய போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி வாகன ஸ்டிக்கர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோல் பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், டாக்டர்கள் போர்வையில் சமூகவிரோத குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது போலீசாருக்கு, பத்திரிகையாளர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்தனர்.

 தமிழ்நாடு முழுதும் இது போன்ற போலிகள் இன்றும் எந்த பயமும் இல்லாமல் சுதந்திரமாக உலா வந்தவாறு உள்ளனர். ஆண்டு தோறும பெருகி வரும் இந்த போலிகளை முழுமையாக ஒழித்து கட்ட எந்த அதிகாரியும் முன் வருவதில்லை என்பதுதான் வேதனை.

 சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வகித்தவர்களுக்கும், போலீஸ் கமிஷனர், எஸ்.பி போன்ற காவல் அதிகாரிகளுக்கும் சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரும் வேண்டுகோளும் பல முறை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவவரை எந்த விதமான நடவடிக்கைகளும் என்ன காரணத்தாலோ எடுக்கப்படவே இல்லை.

 களைகளைக் களைந்து பயிர்களைக் காப்பது போல் போலிகளைக் களைந்து இச் சமுதாயத்தினைக் காத்திடும் தலையாய கடைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு உள்ளது என்பதை இதன் மூலம் நினைவூட்டுகிறோம்.

பத்திரிகையாளர்கள் கொலை ‘சாதனை’ பட்டியலில் இந்தியா


பத்திரிகையாளர்கள்­­ கொலை செய்யப்படுவதில் தீர்வு காண முடியாத நாடுகள் பட்டியலில் இந்தியா 7வது இடம் பெற்றுள்ளது. பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத பட்டியலில், மோசமான சாதனை நிலையில் இந்தியா நின்று கொண்டிருக்கிறது.

 கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம்தேதி வரை 13 நாடுகள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பத்திரி கையாளர்கள் கொலைகளில் தீர்வு காண முடியாத நிலையில் உள்ளன. பத்திரிகையாளர்கள் கொலையில் 70 சதவீதம் பேர் பணி சார்ந்த விஷயங்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

 ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, தீர்வு காணப்படாத பத்திரிகையாளர்கள் கொலை விபரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

 தீர்வு காணப்படாத பத் திரிகையாளர்கள் கொலைகள் பட்டியலில் இராக் முத லிடத்தில் உள்ளது. அங்கு இந்த காலகட்டத்தில் 92 தீர்வு காணப்படாத பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டனர். பிலிப்பைன்சில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பத்திரிகையாளர்கள் கொலையில் இராக், சோமாலியா, பிலிப் பைன்ஸ், இலங்கை, கொலம்பியா நாடுகள் உள்ளன.

பத்திரிகையாளர்கள் கொலை தொடர்பான பட்டியல் இந்த மாத துவக்கத்தில் வெளியானது. பாகிஸ்தான் 10வது இடத்திலும், வங்கதேசம் 11வது இடத்திலும் உள்ளன. பத்திரிகையாளர்கள் கொலை பட்டியலில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன

நன்றி : rootsredindia

Tuesday, 28 June 2011

இலங்கையின் ஊடகவியலாளர்களும், கொலைக்கணக்குகளும் - ஈழவாணி

இலங்கையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் நிலைமைபற்றிப் பேசும் துணிபை யாரும் கொண்டிருக்கவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது, சுதந்திர ஊடகச் செயற்பாட்டில் தம்மைத் தக்கவைக்கும் தன்னிலைப்பாடுகளோடு வாழமுடியாமல் இங்கு அரசுக்கு சலாம்போடுபவர்களாக மாறியிருப்பவர்களின் நிலைமை மிகு பரிதாபமே.ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த விடயமாக இருப்பது ஊடகத்துறையே.இலங்கையில் ஒரு சுதந்திரமான ஊடகம் இருந்ததா என்பது தொடர்பில் எப்பொழுதும் ஒரு கேள்விக்குறியே இருந்துவந்துள்ளது.

உலகில் மனித உரிமைகளை மீறும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமின்றி, ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முதல் 5நாடுகளின் வரிசையில் இடம்பெற்றிருப்பதும் நோக்கத்தக்க விடயமே.ஊடகங்கள் மனித நாகரீகத்தின் மற்றும் கலாச்சார நடைமுறைகளைத் தீர்மானிக்கும் அல்லது நாகரீகத்தைப் புகட்டும் மிகப் பெரும் சக்தியாகவும் இன்று உலகில் வளர்ந்துள்ளமையை யாரும் மறுக்க முடியாது. ஊடகங்கள் மீதாகத் திணிக்கப்படும் கட்டுப்பாடுகள், கட்டுப்படுத்தும் சாரார் தொடர்பான பூதாகாரமான ஒரு நிலையையே தோற்றுவிக்கும். இச்செயற்பாட்டில் அவர்களின் இலக்கை அழித்து அவர்களின் இருப்பை சர்வதேசத்திலும், மக்கள் மத்தியிலும் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதே உண்மை.

கருத்தைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும் வெளியிடுவதற்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு. கட்டுப்பாடுகளின்றி தேச எல்லையைக் கடந்து எந்தவோர் ஊடகத்தின் மூலமாகவும் தகவல்களைத் திரட்டுவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் அதனை விநியோகிப்பதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டு என்று 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி ஐ.நா. சபை வெளியிட்ட மனித உரிமைகள் தொடர்பான நம்பிக்கைப் பிரகடனத்தின் 10 ஆவது சரத்தின் 11ஆவது பிரிவில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இது ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஆனால் இந்த விடயத்தை இலங்கையில் பேணிப்பாதுகாக்கின்றார்களா என்றால் மிகவும் கவலைக்குரிய விடயமே . 

ஓர் ஊடகத்தில் ஊடகவியலாளன் ஒருவன் செய்தியை எழுதுகின்றபோது அல்லது உண்மையை வெளியிடுகின்றபோது அல்லது சுதந்திரமாக ஒரு கருத்தை வெளியிடுகின்றபோது அவன் தாக்கப்படுகின்றான் அல்லது காணாமல் போகின்றான் அல்லது சிறைகளில் அடைக்கப்படுகின்றான். இந்த நிலைமையே இந்நாட்டில் தொடர் சம்பவங்களாகிக் கொண்டிருக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ஊகடவியலாளர்களில் 34 தமிழ் ஊடகவியலாளர்களும் 2 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றார்கள். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவந்ததற்குப் பிற்பாடுதான் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உண்டென நினைக்கிறேன்
முன்னாள் ஜனாதிபதிகளான ஆர். பிரேமதாஸவின்( பிரதமர் )ஆட்சிக்காலத்தில் 2 ஊடகவியலாளர்களும் திருமதி சந்திரி கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கையில் கொலைசெய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு ரீதியில் 7.1 சதவீதமாக இருக்கின்றது. ஆக அதிகளவான ஊடகவியலாளர்கள் சிறிய நாடான இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.இலங்கை ஆசியாவின் ஆச்சரியம் என்ற விடயத்தில் இதையும் சேர்க்கத் தோன்றுகிறது.

இலங்கையிலே தொடர்ச்சியாக நடந்த யுத்தத்தின் காரணமாக நாட்டைவிட்டு100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். குறிப்பாக 50க்கும் மேற்பட்ட தமிழ் பேசுகின்ற பத்திரிகையாளர்கள் வாழ முடியாமல் வெளிநாடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலையிலே தான் இன்று ஊடக சுதந்திரம் இருக்கின்றது. உண்மையிலே ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கவேண்டுமென்றால் சுதந்திர தன்மையுடன் அவர்கள் எழுதுவதற்கான உத்தரவாதத்தை இங்கு யார் வழங்குவது...? 

வெறுமனே ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன என்று கூறிக்கொண்டு அச்சுறுத்தலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசு எப்படி பொறுப்புவாய்ந்த ஊடகமாகத் துறையை நாட்டில் உருவாக்க முடியும்?

இலங்கையின் ஊடகவியலாளர்களின் பிரபலமான கொலை வரலாற்றை நோக்கின்.......
1976ம் ஆண்டு "இளைஞர் குரல்" என்ற பத்திரிகையின் ஆசிரியரும் சமூக சேவகருமான இறைகுமாரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதேபோலவே 1989ம் ஆண்டு முறிந்த பனை’ என்ற நூலை இணைந்து எழுதிய கலாநிதி.ராஜினி திரணகம அந் நூல்வெளியீட்டுக்குத் தயாராகும் போது கொல்லப்பட்டார். இவ்வாண்டிலேயே இலங்கையின் முதலாவது சிங்கள வானொலி அறிவிப்பாளரும் சுயாதீனத் தொலைக்காட்சியின் பணிப்பாளருமான தேவிஸ் குருகே படுகொலை செய்யப் பட்டார். 

டுத்து தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலையாக நிற்கும் மதுரக் குரலோன் கே.எஸ். ராஜா (கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா) இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மிகப் புகழ் மிக்க அறிவிப்பாளரான இவர் கொழும்பு கடற்கரையில் படுகொலை செய்யப்பட்டார். 

ரிச்சர்ட் டி. சொய்சா இலங்கையில் இருந்த முன்னணி ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் . இவர் இனம் தெரியாத நபர்களால் இவரது வீட்டில் இருக்கும்போது கடத்தப்பட்டு 1990 இல் கொலை செய்யப்பட்டார். இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையானரூபவாஹினி’யில் ஆங்கிலச்செய்தி வாசிப்பாளராகவும் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மயில்வாகனம் நிமலராஜன் 2000ம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பி.பி.சி.தமிழோசையின் மற்றும் சர்வதேச சேவைகளின் செய்தியாளர் என்பது குறிப்பிடத் தக்கது. ஐயாத்துரை நடேசன் (நெல்லை நடேசன்) 2004ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். தர்மரத்தினம் சிவராம்(தராக்கி சிவராம்). 2005ம் ஆண்டு கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார்.ரேலங்கி செல்வராஜா இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர், இவர் ஆகஸ்ட் 2005 கொழும்பில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். லசந்த விக்கிரமதுங்க இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும் வழக்கறிஞரும் ஆவார். இவர் கொழும்பில் இருந்து வெளியாகும்த சண்டே லீடர்’ என்ற ஆங்கில ஞாயிறு இதழ் மற்றும் புதன் தோறும் வெளிவரும் "மோர்னிங் லீடர்" வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்தவர். 2009 இல் இவர் இனந்தெரியாதோரால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவை தவிர பல பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களின் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறியே தம் பணிகளைச் செய்யக்கூடிய நிலைக்குப் பலாத்காரமாகத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்குள் இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாசும் அடக்கம். ஊடகவியலாளர் என்ற ஒரு சமூகத்தின் வளர்சியில் மிகப் பங்காற்றும் சாத்வீகப் போராளிகளை அதிவேகமாகத் துரத்திக்கொண்டிருப்பது ஆயுதங்களின் மிரட்டல்களும் பலி வாங்கல்களுமே என்பதோடு மட்டுமின்றி தமிழருக்கு எதிரான அரசின் செயற்பாடுகளுமே என்பதும்தான் அப்பட்டமான உண்மை.

யுத்தம் நடக்கின்ற, போராட்டம் நடக்கின்ற அல்லது இனக்காழ்ப்புகள் கொண்ட ஒரு தேசத்தில் ஊடகங்கள் மீதான அடக்குமுறை என்பது உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்றதென்பதே இந்த நாகரீக உலகின் வருத்தம் மிக்க உண்மையாகும். வெகுஜன ஊடகங்கள் ஒரு சமூகப் பிரக்ஞையுடன் செயற்பட வேண்டும். மக்கள் சரியான திசை வழியே பயணிப்பதற்கு ஊடகங்களின் செயற்பாடு முக்கியமான பாத்திரத்தை வகிக்க முடியும். ஒரு சமூக மாற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் சமூக விழிப்பிற்கும் ஊடகங்கள் பெரும் பங்களிப்பை ஆற்ற முடியும். எனவே அவர்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்களாக உண்மையானவர்களாக செயற்பட முயல வேண்டும். ஊடகத்துறை சமூகத்தின் முதுகெலும்பாகச் செயற்பட வேண்டும்.இவர்களின் பிழையான செயற்பாடுகள் தனிநபர்களை மட்டும் அல்ல, ஒரு சமூகத்தையே ஏன் ஒரு நாட்டையே புரட்டிப்போட்டுவிடும். இது அண்மையில் இலங்கையின் வரலாற்றிலே இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இருப்பினும் தடைகளைத் தாண்டி ஊடகவியலாளர்களின் பேனாக்களும் குரல்களும் நசுக்கப்படும் தடவைகளை விஞ்சி மறுபடி மறுபடி வீரியத்தோடும் வேகத்தோடும் உலகின் மனித நலனுக்காகச் செயற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

நன்றி: உயிரோசை

Monday, 27 June 2011

கூகுள் தமிழுக்கு Contribute செய்வோம்

கூகுளின் மொழி மாற்று வசதியை பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த வசதி தற்போது சோதனை அ‌டிப்படையில் உள்ளது. மொழிபெயர்ப்பும் சிறப்பானதாக இல்லை. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கிறது. சில வாக்கியங்களை மட்டுமே சரியாக மொழிபெயர்க்கிறது. இதனை சரி செய்யும் பணி நம் கைகளில்தான் உள்ளது. ஆம், இந்த மொழிமாற்று வசதியை கூகுள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இத்தனை நாட்களாக கூகுளின் மொழி மாற்றி லேப் தளத்தில் சில தன்னார்வலர்களால் பதியப்பட்டு வந்த வார்த்தைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியதும், உலகம் முழுவதிலிமிருந்து கூகுள் தளத்திற்கு வரும் தமிழ் அன்பர்களின் வளர்ச்சியும்தான் (வியாபார யுக்தி என்றும் சொல்லலாம்) கூகுள் தன் மொழிபெயர்ப்புப் பட்டியலில் தமிழைச் சேர்த்ததற்குக் காரணம்.
இந்த மொழிபெயர்ப்பு‌ சேவை தமிழுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த நாம் மொழி மாற்றிப் படிக்க நினைக்கும் கட்டுரை அல்லது இணையதளத்தை தேர்ந்தெடுத்து உள்ளிடும்போது கிடைக்கும் தமிழ் மொழிபெயர்ப்புக் கட்டுரையில் வார்த்தைகள் தவறாக இருந்தால் அதனை உடனடியாக சரி செய்யலாம்.
அதற்குத் தவறான சொற்றொடரின் மீது மொளசின் முனையை கொண்டு சென்றால் அச்சொல்லிற்கு இணையான வேறு சொற்கள் காட்டப்படும். அதில் சரியானதைத் தேர்ந்தெடுத்த அளிக்கலாம் அல்லது வேறு புதிய பொருத்தமான வார்த்தை அல்லது வாசகம் இருந்தால் அதனை உடனடியாக தட்டச்சு செய்து உள்ளிடலாம்.


அதுவே இணையதள மொழி மாற்றியாக இருந்தால் Contribute a better translation என்ற Box வரும். அதனைக் கிளிக் செய்து சரியான சொற்றொடரைக் கொடுத்து Contribute என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

(இப்படிச் செய்வதால் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா?
அதற்காக சிறு விளக்கம். தொழில் நுட்பத்துறை சார்ந்தவர்களுக்கு தெரிந்ததுதான், மற்றவர்களுக்காக:
கூகுள் தளத்தின் சிறப்பே அதுதான். கூகுள் இணைய தளத்தில் நீங்கள் தேடும் ஒரு வி‌‌ஷயம் தொடர்ந்து பல மாதங்களுக்கு அதன் டேட்டா பேஸில் பதிந்து வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல நீங்கள் எந்த ஐபி முகவரி அல்லது ஜிமெயில் கணக்கிலிருந்து தேடியுள்ளீர்கள் என்பதும் நீங்கள் தேடும் பொருள் குறித்த பட்டியலில் எந்த இணையதள இணைப்பை கிளிக் செய்கிறீர்கள் என்பதும் கூடப் பதியப்படுகிறது. இதுபோல உலகம் முழுவதுமிருந்து தேடுபவர்களின் விபரங்களை கூகுள் ஒவ்வொரு நொடியிலும் பதிந்து கொண்டேயிருக்கிறது. (இந்த செயல் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்ற குரல் ஒலித்தாலும், அதுதான் கூகுளின் அஸ்திவாரம் ‌)
எடுத்துக்காட்டாக அண்ணா யுனிவர்சிட்டி என்று கொடுத்து தேடும்போது முதலிடத்தில் பல்கலைக் கழகத்தின் இணையப்பக்கம் வருவதும் இந்த அடிப்படையில்தான். ஒரு இணையதளத்தை அதிகம்பேர் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்தால் அவர்கள் கிளிக் செய்த நாடு, பகுதி, இணையதளத்தின் வகை, தேடும் பொருள், அது சார்ந்த பிற என்று பல கூடுதல் விபரங்களையும் அலசி ஆராய்ந்து நீங்கள் தேடுவது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம்தான் என்பதாக முடிவெடுத்துக் காட்டுகிறது.
அதுவே அண்ணா பல்கலைக்கழகம் என்று ஒன்று கனடாவில் இருந்தால் நீங்கள் இருக்கும் இடம் கனடாவாக இருக்கும் பட்சத்தில் கனடாவில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தை முன்னிலைப்படுத்திக் காட்டக் கூடும்.
இத்தொழில்நுட்பம்தான் கூகுளின் அனைத்து வகை சேவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.)

எனவே நீங்கள் இப்போது கொடுக்கும் சரியான வார்த்தை அல்லது வாக்கியம் மற்றொருமுறை அதே போன்ற வாக்கிய அமைப்பு வரும்பொழுது பயன்படுத்தப்படும். வளமை மிக்க தமிழ் மொழியில் சொற்பிழை, பொருட்பிழை இன்றி குறைந்த காலத்திற்குள்ளாக மொழிபெயர்ப்பு சேவை சரியானதாகவும் சிறந்த தரத்திற்கும் மாறுவது என்பது இனி நம் அனைவரின் பங்களிப்பி்ல்தான் உள்ளது. Contribute a better translation.

நன்றி: நதிக்கரை

Saturday, 25 June 2011

நெகிழ வைத்த ஒரு கவிதை : "அப்பா..."

 

அப்பா...

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...


அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...


கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?


சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

முன் நிகழ்வு - எழுத்துலகச் சகோதரனுக்கு எங்கள் அஞ்சலி!

மும்பை புலனாய்வுப் பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே
நிழலுலக தாதாக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மும்பை புலனாய்வுப் பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே அவர்களுக்கு சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தினரால் ஜூன் 14ந் தேதி அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.


சேலத்தில் நடந்த ஊடகவியலாளர் புத்தாக்கப் பயிற்சி முகாம் பற்றி நாளிதழ்களில் வெளியான செய்திகள்

தினமணி

இந்தியன் எக்ஸ்பிரஸ்

காலைக்கதிர்