Pages

Thursday, 12 January 2012

படித்ததில் பிடித்தது: தந்தையைப் பற்றிய தனயனின் எண்ணங்கள்.....!


At 4 Years 
என் அப்பா தான் உலகத்திலேயே சிறந்தவர் !

At 6 Years 
என் அப்பாவுக்கு எல்லாமும் தெரியும், எல்லாரையும் தெரியும் !

At 10 Years 
அடிக்கடி கோபப்பட்டாலும் என் அப்பா ரொம்ப நல்லவர் !

At 12 Years 
நான் சின்ன பையனா இருக்குற வரைக்கும் 
அவர் என் மேல ரொம்ப அன்பா இருந்தார் !

At 16 Years 
அப்பாவுக்கு இப்ப இருக்குற விஷயங்கள் தெரியல... 
இன்னும் அந்த கால நெனைப்புலையே இருக்காரு !

At 20 Years 
ச்ச.. இவர் கூட எப்படி தான் இத்தனை நாள் 
அம்மா காலம் தள்ளுனாங்களோ தெரியல !

At 25 Years 
இவரு எப்பவுமே இப்படி தான் ! எதையுமே ஒத்துக்க மாட்டாரு ! 
நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு சொல்லிக்கிட்டு !

At 30 Years 
என்னால என் பையன சமாளிக்கவே முடியலையே !
எப்படி தான் என் அப்பா என்னை சின்ன வயசுல சமாளிச்சாரோ !

At 40 Years 
எனக்கு ஒழுக்கம்னா என்னனு சொல்லி தந்தது என் அப்பா தான்... 
நானும் என் பையனுக்கு அதையே சொல்லி தரனும் !

At 50 Years 
எங்க அப்பா எங்கள வளர்க்க எவ்வளோ கஷ்டப்பட்டாருன்னு 
இப்ப தான் புரியுது, என்னால என் ஒரே பையனையே சமாளிக்க முடியலையே !

At 55 Years 
எங்களுக்காக என் அப்பா நெறைய செய்ஞ்சு இருக்காரு !

At 60 Years 
என் அப்பா தான் உலகத்துலேயே சிறந்தவர் !

# அப்பா சிறந்தவர்னு 56 வருஷம் கழிச்சு தான் நமக்கு மறுபடியும் தெரியுது... அதனால இப்ப இருந்தாவது அவங்களுக்கு சந்தோஷத்தையும் , நிம்மதியையும் தருவோம் !!! #

நன்றி: விஜய் சரவணன் 

1 comment:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete