கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த 9 அநாதைப் பிணங்களை (அதில் ஓன்று குழந்தை) கடந்த 22ந் தேதியன்று கோவைபுதூர் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் நல்லடக்கம் செய்து மனித நேயத் தொண்டு புரிந்துள்ளனர்.
இரண்டாம் ஆண்டு MSW பயிலும் மாணவியர் மாலினி, சுருதி, முதலாமாண்டு Bsc பயிலும் வினித், ஸ்ரீராம், மூன்றாமாண்டு Bsc பயிலும் நிர்மல், நந்தகுமார், இதயனாதன், மற்றும் முதலாமாண்டு BBM பயிலும் தீபக் ஆகிய இந்த 8 பேர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனமான தோழர் அறக்கட்டளையுடன் இணைந்து அந்த அநாதை உடல்களை நல்லடக்கம் செய்தனர்.
கோவை அரசு பொது மருத்துவமனையில் 2004 ஆண்டு மார்ச் முதல் இந்த நாள்வரை 1530 ஆதரவற்ற உடல்களை தோழர் அறக்கட்டளை மனித நேயம் கொண்டோரின் உதவியுடன் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளது.
அந்த வகையில் தோழர் அறக்கட்டளை நிர்வாகி சாந்தகுமாருடன் இணைந்து கிருஷ்ணா கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் அந்த 9 உடல்களை கோவை, பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஆத்துப்பாலம் மின் மயானம் கொண்டு சென்று எரியூட்டினர்.
உயிர் நீத்தார்க்கு உறவுகள் இருந்தால் எப்படி மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுமோ அதைப்போல அந்த உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்து எரியூட்டினர்.
இந்த மனித நேயமிக்க செயலை செய்த மாணவ மாணவியரை சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் மனதாரப் பாராட்டுகிறது,
இது பற்றிய காணொளி....
உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறோம்.
ReplyDeleteவாழ்த்துகள்.