தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் சேலம் செய்தியாளர்களால் கடந்த ஜனவரி பதினைந்தாம் தேதி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
இந்த நிகழ்வை சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தினருடன் பிற செய்தியாளர்களும் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக் கழக இதழியல் மற்றும் ஊடகத்துறைத் தலைவர் 'பாலை முதுவன்' பேராசிரியர் முனைவர் வை.நடராசன், பேராசிரியர்.இராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு செய்தியாளர்கள் நடத்திய பொங்கல் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
உழவர் கரங்கள்
உவகைப் பெருக்குடன்
வழங்கிய நெல்லும்
வாழையும் கரும்பும்
இதயம் நிறைய
எவரும் பெறுக!
பொங்கலோ பொங்கல்!
எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDelete