Pages

Friday, 13 January 2012

படித்ததில் பிடித்தது: பெண்கள்....



நான் குழந்தையாய் இருக்கையில் என்னை அரவணைக்க
என் அன்னையாய்…!

நான் வளர்கையில் என்னுடன் விளையாடவும், என்னைக் கொண்டாடவும்
என் தங்கையாய்…!

நான் நல்ல பண்புகளோடும், புத்திசாலியாகவும் வளர பள்ளியில்
என் ஆசிரியையாய்…!

நான் சோர்வுறும்போது சோகத்தில் இருக்கும்போது சாய்ந்து கொள்ள தோள் கொடுத்தும் என்னை புத்துணர்ச்சியோடும் மீட்டு எடுக்க
என் காதலியாய்…!

எனக்கு என்ன வேண்டும், எப்படி வேண்டும், எதற்கு வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு என்னில் பாதியாய்
என் மனைவியாய்…!

நான் மனதளவில் உறுதியானவனாக இருந்தாலும், தன் சிரிப்பினில் என்னை உருக வைக்க
என் மகளாய்…!

நான் இறந்த பின்னும் என்னைத் தாங்கும்
என் தாய்மண்ணாய்…!

இவ்வாறு பலவுமாய் இருக்கும்
பெண்கள் இல்லையேல் ஆண்கள் வாழ்க்கை அர்த்தமற்றதாய் மொத்தத்தில் இருந்திருக்கும் …!!

நன்றி: விஜய் சரவணன்

No comments:

Post a Comment