1. மாறுகண் :கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.. வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.
2. கண் புரை ( காடராக்ட்) :கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.
3. கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ..முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ஏ (ஆல்பா டாக்கோபரால்)உள்ளது.
4. இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
5. எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கவே கூடாது.
6. கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும் கண்களைக் கெடுத்துவிடும். காலதாமதம் செய்யாமல் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
நம்மைப் போன்ர நெட்டிசன்களுக்கு மட்டுமன்றி....உலகில் உள்ள அனைவருக்குமே மனித உடலில்...மிக முக்கியமான உறுப்பு கண்கள் தாம். எனவே கண்களை பேணிப் பாதுகாப்போம்.
No comments:
Post a Comment