Pages

Monday, 9 January 2012

ஊடக விழிப்புணர்வு பயிலரங்கம்!



சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை சார்பில் ஊடக விழிப்புணர்வு பயிலரங்கம் ஜனவரி 10 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.


துணை வேந்தர் கி.முத்துச்செழியன் தலைமையில் நடைபெறும் இந்த பயிலரங்கில் சென்னை தூர்தர்ஷன் நிலைய செய்தி இயக்குநர் இ.மாரியப்பன் கலந்து கொண்டு 'சமுதாய வளர்ச்சியில் அரசு ஊடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.


நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் பி.கோவிந்தராஜூ, கோவை பாரதியார் பல்கலைக்கழக தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் பி.இ.தாமஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.


பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் பேராசிரியர் வை.நடராஜன் வரவேற்கிறார். மா.தமிழ்ப்பரிதி நன்றி கூறுகிறார்.


ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment