Pages

Sunday 8 January 2012

ஆட்டோமாடிக் நம்பர் பிளேட் ரீடர்!


தெற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எல்லா போலீஸ் கார்களிலும் ஒரு சின்ன கொக்கி மாதிரி ஒரு கருவி காரின் முன்பும் பின்பும் இருக்கும். இதற்கு ஆட்டோமாடிக் நம்பர் பிளேட் ரீடர் என்று பெயர். படுவேகமாகச் செல்லும் கார்களின் முன் பின் மற்றும் இரண்டு பக்கமும் உள்ள நம்பர் பிளேட்டுகளை இந்த ரீடர் ஸ்கேன் செய்து அந்த விபரங்களை போலீஸ் காரினுள் பொருத்தபட்டிருக்கும் கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைக்கும். நான்கு ரீடர்களில் இருந்து நொடிக்கு சுமார் 40 கார் நம்பர் பிளேட்களை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் அக்னாலட்ஜ் செய்து அனுப்பப்படும்.






உடனே, அந்தந்த வண்டிகளின் டேக்ஸ் (வரி), இன்ஸூரன்ஸ் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள டேட்டாக்களில் இருந்து தேடி எடுக்கப்பட்டு திரையில் ஒடிகொண்டே இருக்கும். ஒரு வண்டியின் டாக்ஸ் அல்லது இன்ஸூரன்ஸ் மற்றும் லைசன்ஸ் எக்ஸ்பயரி ஆகி இருந்தால் உடனே அந்த பிளேட்டின் போட்டோ போட்டு அலார்ம் செய்யும். உடனடியாக அந்த வண்டிகள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விடும். இதுவே அமெரிக்கா போன்ற மேலை  நாடுகளில் குற்றம் குறையக்  காரணம். 


அது போக திருட்டு வண்டி மற்றும் போலி நம்பர் பிளேட் உள்ள டூப்ளிகேட் வண்டி உடனுக்குடன் கண்டு பிடிக்கப்பட்டு விடுவதால் ஆள் கடத்தல் போன்றவை பெருமளவு அந்த நாடுகளில் குறைந்து விட்டன. இதில் இன்னொரு சிறப்பு நம்பர் பிளேட் இல்லாமல் அல்லது நம்பரை திருத்தி மற்றும் நம்பரை வேண்டுமென்றே மறைத்திருந்தால் அதற்கும் அலெர்ட் செய்யும். 


அரசாங்கம் சப்ளை செய்யும் ஒரே மாதிரியான நம்பர் ப்ளேட் பொருத்தப்பட்டால் தான்  அது இந்த ரீடருக்கு ரொம்ப உதவியாக இருக்கும். உங்கள் ஏரியா இல்லாமல் இன்னொரு ஏரியாவில் நீங்கள் சந்தேகப்படும்படி சுற்றினாலும் இது காட்டிக் கொடுத்துவிடும். சிலர் காரை குறிப்பிட்ட குறிபிட்ட நேரத்திற்கு மேல் நிறுத்தி வைத்திருந்தால் ஒவ்வொரு முறை போலீஸ் பேட்ரோல் வண்டி ரோந்து வரும்போதும் அலர்ட் செய்யப்பட்டுக் காட்டி கொடுத்து விடும். 


ஆட்டோமாடிக் நம்பர் பிளேட் ரீடர் ஸ்கேன் செய்யும் எல்லா டீட்டெயிலும் ஒரு வருடம் வரை போலீஸ் டேட்டாபேஸில் இருக்கும். அதனால் ஒருவர் தன்னுடைய கார் காணாமற்போய் விட்டது என்று பொய்யாகவும், ஒரு இடத்துக்குத் தான் போகவே இல்லை என டுபாக்கூர் ஸ்டேட்மென்ட் கொடுக்கவே முடியாது.


தகவல்: நாகராஜன் ரவி 

No comments:

Post a Comment