காஞ்சிபுரம் ஓரிக்கை கிராமத்தை சேர்ந்த 27 வயது நிரம்பிய செங்கொடி என்ற இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 28ந்தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேரறிவாளன் சாந்தன்.முருகன் இந்த மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தமாறு சத்தமிட்டுக்கொண்டே தீக்குளித்தார் ......அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்...
மூன்று தமிழர்களைக் காக்கும் போராட்டத்தில் செங்கொடி
செங்கொடியின் கடிதம்
கருகிய நிலையில் செங்கொடி
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை:
ஈழத்தமிழர் உரிமைப்பார்வையில் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க தமிழக மக்களும் தமிழக அரசும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழர் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதல்லாமல் மனிதமே அதிர்கிற வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற மைய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இது பேரதிர்ச்சியாகவே இருந்தது.
அதற்கென மக்கள்திரள் போராட்டங்களும் சட்டப்போராட்டமும் நடந்துவருகிற இவ்வேளையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி அவர்கள் தீக்குளித்ததாக வந்துள்ள செய்தி அனைவரையும் மேலும் அதிரவைத்துள்ளது.
கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்த ஆயிரம் வழிமுறைகள் இருக்க, போராடும் சக்திகள் தங்களையே அழித்துக்கொள்ளும் இம்முறையை அருள்கூர்ந்து யாரும் தொடர வேண்டாம் என வலிறுத்தி வேண்டிக்கொள்கிறோம்.
அவர்களது உணர்வுகள் நமக்குப் புரிகிறது. ஆனால் அதிகார வெறிகொண்ட மத்திய பாசிச ஆட்சியாளர்களுக்கு இது சிறு அசைவையாவது ஏற்படுத்துமா என்பது அய்யமே
நாம் தொடர்ந்து நமது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை வலிறுத்திப் போராடுவோம்.