Pages

Friday 12 August 2011

பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் பணி நிறைவு!


பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் சேது.குணசேகரன் 11-08-2011 வியாழக்கிழமையன்று பணி நிறைவு பெற்றார். பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளராக சென்னை பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் சேது.குணசேகரன் கடந்த 2008-ம் ஆண்டு பதவியேற்றார். அவர் பதவியேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்தைத் தொடர்ந்து அவர் பணி நிறைவு பெற்றார். அவருக்குத் துணைவேந்தர் கே.முத்துச்செழியன்,தொலைதூரக் கல்வித்துறை இயக்குநர் ஜி.குணசேகரன்,தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன்,நிதி அலுவலர் ரவிஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.


பணி ஓய்வு பெறுவதையொட்டி முனைவர் சேது.குணசேகரன் தனது தாயார் சாலம்மாள் சேதுராமன் பெயரில் அறக்கட்டளை தொடங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். இந்த அறக்கட்டளை வாயிலாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறந்த நிர்வாகப் பணியாளர்களுக்கு விருது வழங்கப்படும். 

இதே போன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பயிலும் ஆங்கிலம்,வணிகவியல் மற்றும்கணினி அறிவியல் துறை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவதற்காக ரூ.15 ஆயிரத்தையும் துணை வேந்தர் கே.முத்துச்செழியனிடம் பதிவாளர் சேது.குணசேகரன் வழங்கினார். பதிவாளர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பெ.மாதையன் பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment