Pages

Friday 5 August 2011

ஆன்லைனில் புகைப்பட எடிட்டிங் செய்ய அசத்தலான இணையதளம்.


புகைப்படத்தில் தேவையான இடத்தைத் தவிர மற்ற இடங்களை நீக்கி விடலாம் என்றால் குறைந்தபட்சம் இதற்காக நாம் பெயிண்ட் போன்ற மென்பொருட்களைத் தான் தேடி செல்வோம் ஆனால் இனி ஆன்லைன் மூலம் நம் புகைப்படங்களின் அளவை அதிகரிக்க,சுருக்க மற்றும் தேவையானவற்ற வெட்டி எடுக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


புகைப்படங்களில் தேவையான பகுதியை நொடியில் வெட்டி எடுக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால் போட்டோ ஷாப்  போன்ற சாப்ட்வேர் கிடைக்காத சமயங்களில் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :http://imagesplitter.net

இத் தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு Convert , Split ,Crop என்ற மூன்று மெனு தெரியவரும் இதிலிருந்து மாற்ற விரும் Width மற்றும் Height கொடுத்து Convert image என்பதை சொடுக்கினால் போது உடனடியாக நாம் கொடுத்த அளவுகளில் படம் மாற்றப்பட்டு தறவிரக்கம் ஆகிவிடும்.

Crop என்பதை சொடுக்கி நாம் தறவேற்றிய படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை எளிதாக தேர்ந்தெடுத்து Crop image என்பதை சொடுக்கி மாற்றலாம், எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை எளிதாக அதுவும் சில நிமிடங்களில் , புகைப்படத்தின் அளவை அதிகரிக்க மற்றும் சுருக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.

மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்

நாசா வெளியீட்டுள்ள சூரியனின் பிரேத்யேகமான படம் மற்றும் வீடியோக்கள்

ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம்.

நன்றி: விண்மணி

No comments:

Post a Comment