சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பார்த்தீனிய செடியை அழிக்க மாணவர் இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது.
65-வது சுதந்திர தினவிழா பெரியார் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட போது இதனை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முத்துச்செழியன் தெரிவித்தார்.
அகில இந்திய அளவில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக உள்ளது.இந்த அளவு தமிழகத்தில் 16 சதவீதமாக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும் இதுபோதும் என நிறைவடைய முடியாது.நாம் இன்னமும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த வல்லுநர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்க வேண்டும்.பரந்து விரிந்து கிடக்கும் மண்ணில் தங்களின் அடையாளங்களை பதிவு செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.ஆய்வுகள் ஆய்வகங்களிலும்,நூலகங்களிலும் தூங்கும் அலங்காரப் பொருளாக இருந்து விடக்கூடாது.அது மக்களைச் சென்றடைய வேண்டும்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பல நோய்களுக்கு வழிவகுக்கும் பார்த்தீனிய விஷச்செடியை ஒழிக்க இயக்கம் ஒன்று தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்-அமைச்சரின் உத்தரவிற்கு ஏற்ப சேலம்,தருமபுரி,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 75 கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளைக் கொண்டு பார்த்தீனிய செடிகளை முற்றிலும் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும்.மேலும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் சேவையாற்றும் 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் வாயிலாக நான்கு மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் பாரத்தீனிய செடி ஒழிப்புப் பணி செய்யப்படும் என்று விழாவில் பேசிய போது பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முத்துச்செழியன் தெரிவித்தார்.
ஏற்கனவே சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றத்துடன் இணைந்து ஒரு லட்சம் மரக் கன்றுகளை மாணவர்களைக் கொண்டு நடச் செய்யும் முயற்சியை வெற்றிகரமாகத் தொடங்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முத்துச்செழியனின் இந்த முயற்சியும் நிச்சயம் வெல்லும் என்பதில் ஐயமில்லை!
ஏற்கனவே சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றத்துடன் இணைந்து ஒரு லட்சம் மரக் கன்றுகளை மாணவர்களைக் கொண்டு நடச் செய்யும் முயற்சியை வெற்றிகரமாகத் தொடங்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முத்துச்செழியனின் இந்த முயற்சியும் நிச்சயம் வெல்லும் என்பதில் ஐயமில்லை!
No comments:
Post a Comment