Pages

Wednesday, 3 August 2011

இது கொஞ்சம் ஓவர்தான்....!

நில அபகரிப்புப் புகார்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கடந்த 25ந் தேதி முதல் 27ந் தேதி வரியில் மூன்று நாட்கள் போலீஸ் காவல் விசாரணை சேலத்தில் நடைபெற்றது. 

சேலம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலையில் கூடிய தி.மு.க.வினர் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை ஆபாச வார்த்தைகளுடன் சத்தமாகத் திட்டித் தீர்த்தனர். 

குடிபோதையில் இருந்த சிலர் ஈடுபட்ட ஆபாச செயலோ பதைப்புக்குரியது.




கழுத்தில் மாலையை மாட்டிக் கொண்டு காணப்பட்ட ஒருவர் பச்சை நிற சேலையைத் தன்னுடலில் சுற்றிக் கொண்டு ஜெயலலிதா நடித்த பழைய திரைப்படப் பாடலைப் பாடி நின்றார். 




அவரைச் சுற்றி நின்ற தி.மு.க. செயல் வீரர்கள் சிலர் பாடியபடி நின்றவரை இழுத்து கட்டியணைத்துத் தெரு நாய்களும் நகும் அளவுக்குக் கேவலமான செயல்களில் ஈடுபட்டனர். இது அந்த பகுதி மக்களை அருவருப்பால் முகம் சுழிக்க வைத்தது.

இந்த கேவலமான லைவ் ஷோ போலீஸ் முன்னிலையில் நடந்ததுதான் வேதனைக்குரியது. தெருவில் சாதரணமாக ஒருவர் ஆபாச வார்த்தைகளை பேசினாலே தண்டனைக்குரிய குற்றம் அது என்று சட்டம் சொல்கிறது.






சேலம் நகரக் காவல் நிலையத்தை அடுத்தாற் போல இருக்கும் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலக வாசலில் ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட போலீசார் வாய் மூடி மௌனிகளாக நிற்க கண்டனத்துக்குரிய இந்த சம்பவம் நடந்தேறியது.

சேலம் மாநகர போலீசின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்புக்காக அந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் அவர்களும் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவில்லை.

சம்பவம் நடந்த இடத்துக்குக் கூப்பிடு தூரத்தில் தான் சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.கே.செல்வராஜின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் உள்ளது. இந்த சம்பவம் நடக்கும் போதும் அதை அவர் தடுக்க முனைய வில்லை. அதன் பிறகு குறைந்த பட்சம் ஒரு கண்டன அறிக்கை கூட கொடுக்க அவர் முன்வரவில்லை. அவர் மட்டுமல்ல சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அ.தி.மு.க.வினரும் இது வரையில் ஒரு வார்த்தை கூட இது பற்றி பேசவில்லை....

இதற்கெல்லாம் காரணம் என்ன?

என்னதான் நடக்குது சேலத்தில்?

மாண்புமிகு தமிழக முதல்வர் தான் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்....

1 comment:

  1. இந்த செய்கைகளில் ஈடுபட்ட திமுகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை இந்த புகைப்படங்களை வைத்து தேடி வருகின்றனர்.

    ReplyDelete