Pages

Thursday 11 August 2011

'மேட்' கிருஷ்ணசாமியின் வாய்க் கொழுப்பு!

சேலம் மாநகர் மூப்பனார் பேரவையை சேர்ந்தவர் 'மேட்' கிருஷ்ணசாமி எனப்படும் எம்.ஏ.டி. கிருஷ்ணசாமி சேலம் நகர காங்கிரஸ் தலைவராகவும் ஒரு காலத்தில் இருந்தவர். இவரது பெயரின் முன்னெழுத்துகளில் உள்ள புள்ளிகளை நீக்கிவிட்டு அதனை 'மேட்' கிருஷ்ணசாமி  என தீர்க்கதரிசியாக மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் அழைக்க பின்னாளில் அவரது நட்பு வட்டமும் அவரை அப்படியே அழைத்தது.



அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் இவரும் ஒரு குற்றவாளி என எப்.ஐ.ஆர். பதியப்பட்டு சுமார் இரு வாரங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த இவர் நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

கடந்த பத்தாம் தேதி புதன்கிழமை ஜாமீன் கையெழுத்துப் போட வந்த  'மேட்' கிருஷ்ணசாமியை அங்கு நின்றிருந்த புகைப்படச் செய்தியாளர்கள் படமெடுத்திருக்கின்றனர். இதைக் கண்ட  'மேட்' க்குக் கோபம் தலைக்கேற "தின்னவன எல்லாம் உட்டுடானுங்க... என்ன குற்றவாளி மாதிரி படமெடுக்கிரானுங்க. கேனப் ...ங்க. வாங்கடா.. என் வேட்டிய அவுத்துக் காட்டறேன் அதைப் படமெடுத்துப் போடுங்க. நல்லா இருக்கும்" என்று செய்தியாளர்களைப் பார்த்து வண்டை வண்டையாக அர்ச்சனை  செய்திருக்கிறார் இந்த நெடு நாமக்காரர்.

காங்கிரஸ் கலாச்சாரம் என்பது இது தானோ!?


 'மேட்'ன் அர்ச்சனையைக் கேட்டும் கேளாதது போல கண்டு கொள்ளாமல் செய்தியாளர்கள் அமைதி காத்ததன் விளைவாக அங்கு பிரச்னை ஏதும் உருவாகவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த போலீசிடம் இது பற்றி புகார் செய்யப்பட்டிருந்தால் மீண்டும் ஒரு வழக்கில் இந்நேரம் அவர் கம்பி எண்ண வேண்டி வந்திருக்கும்.

செய்தியாளர்கள் எல்லா நேரமும் இதே போல அமைதி காக்க மாட்டார்கள் என்பதை  'மேட்' கிருஷ்ணசாமி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


2 comments:

  1. சில இடங்களில் நமது செய்தியாளர்கள் தவறில் ஈடுபடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. செய்தியாளர்கள் தாக்கப்படும் போதும். இதைப் போல் குற்றவாளிகளாக உள்ள கொள்ளையர்கள் தங்களை நிரபராதி என வெளி உலகிற்கு காட்டிக் கொள்ள முதலில் அவர்கள் தூக்கும் ஆயுதம், பத்திரிக்கையாளர்களை நிந்திப்பது, ஆயுதத்தைக் கொண்டு தண்டிப்பது. பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டாலும், திட்டப்பட்டாலும் உடனடியான நடவடிக்கை நமது பத்திரிக்கையாளர்கள் மூலம் எடுக்கப்பட்டால் மட்டுமே நமக்கு பாதுகாப்பு. இல்லையெனில் இன்று பத்திரிக்கையாளர்களை திட்டுகிறவர்கள், நாளை தாக்கவும் செய்வார்கள். இதற்கு தீர்வு பத்திரிகையாளர் ஒற்றுமை.

    ReplyDelete