Pages

Wednesday, 3 August 2011

மாணவத் திறனாளர்.....


ஊடகவியலில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் முயற்சி இது...

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. விஷுவல் கம்யுனிகேஷன்  மூன்றாமாண்டு பயிலும் மாணவி கே.சுபாஷினியை மாணவத் திறனாளராக அறிமுகம் செய்வதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.


பெண்கள் அதிகம் நுழைய முன்வராத ஒளிப்படப் பிடிப்புத் துறையில் ஆர்வம்  கொண்ட வித்தியாசமான மாணவி இவர்.

"என்னுடைய படிப்பில் போட்டோகிராபி ஒரு பாடமாக இருப்பதால் அதன் மீது எனக்கு இயல்பான ஆர்வம வந்தது. இதன் முக்கிய சில நுணுக்கங்களை என்னுடைய துறை ஆசிரியர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்து உற்சாகமூட்டினர். தவிர நானே தேடிக் கற்றவையும் இதில் அதிகம் உண்டு" என்று புகைப்படத் துறையின் மீது தனக்கு ஆர்வம வந்த விதத்தை கூறுகிறார் சுபாஷினி!

"இதுவரையில் எந்தப் போட்டியிலும் நான் பங்கு பெற்றதில்லை. முதன் முதலாக உங்கள் வலைப்பூவில் என் படங்கள் பிரசுரம் ஆவது பின்னாளில் எனக்குப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்" என்று நான் நம்புகிறேன்" என்கிறார் இவர்.

மலர்களைப் படம் பிடிப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் என்று சொல்லும் சுபாஷினி புகைப்படம் எடுக்கப் பயன்படுத்தி இருப்பது   3.1 மெகா பிக்செல் புகைப்படம் எடுக்கும் வசதியுடன் கூடிய SONY HD (HDR CX150E) காமெராவை!  

ஊட்டி, ஆனைமலை போன்ற ஊர்களுக்கு சுபாஷினி சென்ற சமயங்களில் எடுத்த படங்களில் சிலவற்றைத் தான் நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.




































இதில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியர் தங்கள் படைப்புகளை தங்களது ஸ்டாம்ப் சைஸ் புகைப்படத்துடன் எங்கள் முகவரிக்கு இ.மெயிலில் அனுப்பி வைக்கலாம்.

முகவரி:
 salemdistpressclub@gmail.com

No comments:

Post a Comment