குறிப்பிட்ட சில ஆங்கில நாளிதழ்களில் செய்தி வந்து விட்டாலே போதும் அது அரசாங்கத்தைச் சென்றடையும் என்று திருப்தி பட்டுக் கொள்ளும் அதிகாரிகள் அதிகரித்து விட்டனர். சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பழனிசாமியும் இதே எண்ணத்தைக் கொண்டவராகவே இருக்கிறார்.
இந்த எண்ணத்தின் அடிப்படையில் சேலம் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரியான பழனிசாமி தமிழ், ஆங்கில பத்திரிகைகளிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியை அண்மையில் வெற்றிகரமாகவே செய்து முடித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தமிழகத்திலேயே தனது சொகுசு காரில் உலா வரும் ஒரே பி.ஆர்.ஓ. என்று மற்றவர்களால் பேசப்படுபவர். செல்வச் செழிப்பில் கொழிக்கும் இவர் சொந்த மாவட்டத்துக்கு வருவதற்கு தவமாய்த் தவமிருந்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மாற்றலாகி வந்து பொறுப்பேற்றார்.
வந்த ஒரு சில நாள்களிலேயே சேலத்தில் வழக்கமான ஆக்கிரமிப்பாளர்களைப் போலவே பிரித்தாளும் சூழ்ச்சியை இப்போது தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கி அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணி குறித்து இப்போதைய அதிமுக அரசுக்கு ஆதரவாக செய்தி எழுத வேண்டும் என்று கூறி சேலத்தைச் சேர்ந்த சில ஆங்கிலப் பத்திரிகைகளின் செய்தியாளர்களை திங்கள்கிழமை இரவு அவர் அழைத்துள்ளார்.
இந்தச் செய்தியைச் சேகரிக்க எல்லா பத்திரிகையாளர்களும் வருவதாக ஆங்கிலப் பத்திரிகைகளின் செய்தியாளர்களிடம் கூறியபடியால், அவர்களும் அதை நம்பியவர்களாக கலெக்டர் அலுவலகம் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சென்ற பிறகுதான் ஆங்கிலப் பத்திரிகைகளின் செய்தியாளர்கள் 4 பேர் மட்டுமே தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவது தெரிய வந்தது. உடனடியாக அவர்களில் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும் போய்ச சமாதானங்கள் கூறப்பட்டு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மறுநாள் காலையில் இது தொடர்பான செய்தி மற்ற செய்தியாளர்களிடையே காட்டூத் தீ போல் பரவியதை அடுத்து ஆளாளுக்கு பி.ஆர்.ஓ.வைத் தொடர்பு கொண்டுள்ளனர். பி.ஆர்.ஓ.வின் நெருங்கிய உறவினரும் பி.ஆர்.ஓ. அலுவலக புகைப்படக் கலைஞருமான நபர், அந்த ஆங்கிலப் பத்திரிகைகளின் செய்தியாளர்கள் வற்புறுத்திக் கேட்டதாலேயே சாலைப் பணிச் செய்திக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அனைவரிடமும் ஒரே பொய்யையே தொடர்ந்து கூறி வந்தார்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் சென்ற பல செய்தியாளர்கள் ஆட்சியரின் எதிரிலேயே பி.ஆர்.ஓ.வின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்து கேள்வி எழுப்ப, அதற்காக அவர் கூறிய பதில்தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆங்கில செய்தியாளர்களைப் போலவே இனி எந்த செய்தியாளரும் அரசுக்கு ஆதரவாக செய்தி சேகரிக்கச் செல்வது என்றாலும் பி.ஆர்.ஓ. அலுவலகத்தின் வாகனம் அவர்களுக்கு வழங்கப்படும் என்று ஆட்சியர் முன்னிலையிலேயே பி.ஆர்.ஓ. உறுதி கூறியுள்ளார்.
பி.ஆர்.ஓ.வின் இந்த அறிவிப்பு காட்டுத் தீ போல அனைத்து மாவட்ட செய்தியாளர்களிடமும் குறிப்பாக சென்னை செய்தியாளர்களிடமும் பரவி இக்கட்டான ஒரு சூழலை உருவாக்கி உள்ளது. எதிர்ப்பைத் தெரிவித்தவர்களைச் சரிக்கட்ட என்ன வழி என்று தீவிர ஆலோசனையில் அவர் தற்போது உள்ளார்.
சென்னையில் இருந்து அண்மையில் மாற்றலாகி வந்த உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர் செய்தியாளர்களிடம் இணக்கமாகப் பழகி வருவது பிடிக்காததால் அவரைப் பற்றி அவதூறாக ஒரு பத்திரிகையில் செய்தி எழுதச் செய்துள்ளார் பணக்கார பி.ஆர்.ஓ.வான பழனிசாமி. தற்போது அந்த விஷயமும் வெளியே கசிந்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் உள்ளார்.
அதன் எதிரொலியாகவே அந்த ஏ.பி.ஆர்.ஓ.வைப் பழி வாங்க திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணி குறித்த செய்தியை வெளியிட ஆங்கில செய்தியாளர்களை ஏற்காடு அழைத்துச் செல்லும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதே நேரம் ஊழல்களை தட்டிக் கேட்கும் சேலம் செய்தியாளர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் தனக்குப் பிடிக்காத ஏ.பி.ஆர்.ஓ.வையும் சேர்த்துப் பழிவாங்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் பி.ஆர்.ஓ.
அரசு கொள்கைகளுக்கு எதிரானது என முடக்கப்பட்டு விட்ட கேபிள் டிவி செய்திகளுக்கு அன்னார் அதி தீவிர ஆதரவாளர். கேபிள் நியூஸ் செய்தியாளர்களுக்கு தர முடியாத அடையாள அட்டையை மற்ற செய்தியாளர்களுக்கு மட்டும் தருவதா? என்ற நல்லெண்ணத்தில் தராமல் அதனை முடக்கி வைத்து விட்டார். ஏப்ரல் முதல் வாரத்திலேயே வழங்கப் பட்டிருக்க வேண்டிய செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை ஆகஸ்ட் மாதம் வரையில் இன்னும் வழங்கப்படவே இல்லை என்பது வெட்கக் கேடான விஷயம்! அரசு கொள்கைக்கு எதிரான போக்கை இவர் இனியாது திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே சேலம் செய்தியாளர்களின் ஒருமித்த எண்ணம்.
நல்லெண்ணம் கொண்ட இந்த நபரின் சித்து விளையாட்டுகள் எண்ணற்றவை, ஏராளமானவை. ஆனால் மூக்குடைபடுவது மட்டுமே மிச்சமாகி வருகிறது. சேலம் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நிகழ்வுகளை வெளிக் கொண்டு வரவதற்கே பி.ஆர்.ஓ. என நியமனம் செய்யப்பட்டுள்ள இவர், அதைக் கடந்து சில நோட்டு வேலைகளில் (எத்தனை நாளைக்கு தான் சில்லரை என்று சொல்வது) ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இவர் மிகவும் நல்லவர், ஆமாம் கெட்டவர்களுக்கு நல்லவர்.
ReplyDeleteபத்திரிக்கை நன்பர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அந்த அரவு ஊழியருக்கு தனது கண்டனத்தை மின் - இதழ்.காம் தெரிவிக்கிறது
ReplyDelete