சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையும், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றமும் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல சிறப்பான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் நாள் வெள்ளிக்கிழமையன்று அவர்களால் சர்வதேசப் புகைப்பட நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) முனைவர். திரு. பெ.மாதையன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை மாணவர்களுக்கான இதழியல் புகைப்படக் கலை பற்றிய சிறப்பு வகுப்பு புகைப்படச் செய்தியாளர்களான திரு.ஏ.எம்.சுதாகர் (டைம்ஸ் ஆப் இந்தியா), திரு.பி.விஜயகுமார் (தினமணி) ஆகியோரால் எடுக்கப்பட்டது.
அவர்களுக்கு முனைவர். திரு. பெ.மாதையன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசினை வழங்கிச் சிறப்பித்தார்.
அவர்களுக்கு முனைவர். திரு. பெ.மாதையன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசினை வழங்கிச் சிறப்பித்தார்.
புகைப்படச் செய்தியாளர்களான திரு.சுதாகர், திரு.பி.விஜயகுமார் ஆகிய இருவரும் புகைப்பட உத்திகளைத் தங்களின் சிறப்பான புகைப்படங்களைத் திரையிட்டு அதன் மூலம் விளக்கியது மாணவர்களுக்குப் பயனுள்ள நல்ல அனுபவமாக அமைந்தது. புகைப்படங்கள் பற்றிய மாணவர்களின் சந்தேகங்கள் அவர்களால் தெளிவுபடுத்தப் பட்டன.
மாணவர்களுக்கான இந்த வகுப்பில் ஆர்வத்துடன் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பயனுள்ளதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது என்ற அவர்களின் பாராட்டின் மூலம் இந்த நிகழ்ச்சி எந்த அளவு வெற்றியாக அமைந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைத் தலைவர் முனைவர். வை.நடராசன் நன்றி நவில விழா இனிது நிறைவடைந்தது.
No comments:
Post a Comment