Pages

Wednesday, 20 July 2011

ஈரோடு புத்தகத் திருவிழா 2011

ஈரோடு என்றால் சட்டென நினைவிற்கு வருவது பெரியார், மஞ்சள், உபசரிப்பு எனும் பட்டியலில் சமீப வருடங்களில் இடம் பிடித்திருப்பது “ஈரோடு புத்தகத் திருவிழா”. ஒரு திருமண மண்டபத்தில் பல சிரமங்களுக்கிடையே தொடங்கப்பட்ட இந்தப் புத்தகத் திருவிழா ஆண்டுக்காண்டு பல சிறப்புகளை உள்ளடக்கி வளர்ந்துகொண்டே வருகிறது.

கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுத்தீர்வதும், லட்சக்கணக்கானோர் புத்தகத் திருவிழாவிற்கு வருவதும், ஒவ்வொரு நாள் மாலையிலும் நிகழ்த்தப்படும் உரையினை பல்லாயிரக்கணக்கான மக்கள் செவியுறுவதும் என புத்தகத் திருவிழா இப்பகுதி மக்களுக்கான ஒரு அற்புத அறிவுத் திருவிழா!

அன்பிற்குரிய திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் அயராத முயற்சியில், ”மக்கள் சிந்தனைப்பேரவை”யின் சார்பில் நடத்தப்படும் இந்த ”ஈரோடு புத்தகத் திருவிழா-2011” ஜூலை 29ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 9ம் தேதி முடிய ஈரோடு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு 200 கடைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் மாலையில் அரங்கின் மையத்தில் சிறப்பு அழைப்பாளர்களின் உரைவீச்சு நடைபெறும்.. உரையைக் கேட்க தவறியவர்களுக்கு அடுத்த நாள் முதல், மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகத்தில் குறுந்தகட்டில் உரை விற்பனைக்கு கிடைக்கும்.

மேலதிக விபரங்களுக்கு புத்தகத் திருவிழா இணையத்தை அடைக...

No comments:

Post a Comment