சேலம் மாவட்டத்தைப் பசுமையாக மாற்றும் வகையில், ‘பசுமை சேலம்’ என்று பெயரிடப்பட்ட நல்லதொரு திட்டம் கடந்த ஜூலை 26ந் தேதி சேலத்தில் தொடங்கப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் நமது சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் இணைந்து வடிவமைத்த இத் திட்டத்தினை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.முத்துச்செழியன் தொடங்கி வைத்தார்.
‘பசுமை சேலம்’ திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் மூலம், ஒருலட்சம் மரக்கன்றுகள் அடுத்த ஓராண்டில் நட்டு சேலத்தை பசுமையாக்குவதே இதன் தலையாய நோக்கம். இதற்கான பராமரிப்பு பொறுப்பு மாணவர்களிடமே அளிக்கப்படும்.
இத் திட்டத்துக்கான ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நாமக்கல் மாவட்டம் புகளூர் தமிழ்நாடு காகித உற்பத்தி ஆலை மகிழ்வுடன் நமக்கு வழங்கி இருந்தது. இந்த நிறுவனத்தின் தோட்டக்கலை அலுவலரான திரு.சி.செல்வராஜ் நேரில் வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார்.
No comments:
Post a Comment