Pages

Thursday 14 July 2011

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்....

கல்வி ஆராய்ச்சி இதழியல் நுட்பங்கள் பரிமாற்றம் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறை, சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றுக்கு இடையே இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த புதனன்று (13.07.2011) கையெழுத்தானது. 


இந்தியாவிலேயே முதன் முறை என்ற வகையில் இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று விழாவில் பங்கேற்றவர்கள் பெருமிதத்துடன் இதைப் பற்றி குறிப்பிட்டனர்.


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இதற்காக நடைபெற்ற கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பல்கலைக் கழக இதழியல் துறை மாணவர்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து இரு தரப்பின் மேம்பாடு, பொதுமக்கள் நலன் சார்ந்த விசயங்களை மேற் கொள்வதுடன் ஆக்கப்பூர்வமான செயல்களில் இணைந்து செயல்படுவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். கையொப்பமிட்ட நாளில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தின் காலம் வரையறுக்கப் பட்டுள்ளது. செம்மையாக இது செயல்படும் பட்சத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இது தானாகவே நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.குணசேகரன், சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றத் தலைவர் வை.கதிரவன் ஆகியோர் துணைவேந்தர் கி.முத்துச்செழியன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 


பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் நடராஜன்,  சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றச் செயலாளர் தங்கராஜா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வை செயல்படுத்த நியமிக்கப் பட்டுள்ளனர்.


இந்த விழாவில்  பேசிய துணைவேந்தர் முத்துச்செழியன், இதழியல் துறையை மேம்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான பத்திரிகையாளர் மன்றத்துடன் ஒரு பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது நாட்டிலேயே முதல்முறையாகும்.


ஆராய்ச்சி, திட்டம், கல்வி வளர்ச்சி போன்றவற்றிற்காகப்  பல்கலைக்கழக இதழியல் துறை மாணவர்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து பாடுபடுவர். புதிய கண்டுபிடிப்புகளை வெளியிடுதல், ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுதல், இதழியலில் புதிய யுக்திகள், தொழில் நுட்பங்கள் குறித்த பலதரப்பட்ட கருத்துக்களை பயிற்சி பட்டறைகள் மூலமும், கருத்தரங்குகள் மூலமும் மேம்படுத்தவும், ஒப்பந்தம் வழி வகை செய்யும். 


அத்துடன் மாணவர்கள் இதழியல் களப்பயிற்சி மேற்கொள்ளவும், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட இளம் தலைமுறை பத்திரிகையாளர்கள் இதழியல் பட்டறிவு பெறவும் இந்த ஒப்பந்தம் வப்பிரசாதமாக அமையும்என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இதழியல் துறை தலைவர் நடராஜன், பேராசிரியர்கள் நந்தகுமார், தமிழ்ப்பரிதி, அனுராதா மற்றும் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


இந்தியாவிலேயே முதல் முறையாக பல்கலைக்கழகம் ஒன்றுடன் பத்திரிகையாளர் மன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கண்டுள்ளது சேலத்தில்தான்! அதுவும் நம்முடைய பத்திரிக்கையாளர் மன்றதுடன்தான் என்னும் பொது பூரிப்பில் நெஞ்சம் விம்முகிறது.

இதற்கு துணை நின்ற, அரும்பாடுபட்ட நம் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்!

4 comments:

  1. wisdom maketh world - thanthai PERIYAR


    Reach the Unreached People - SDPC MOTO


    KEEP IT UP

    ReplyDelete
  2. ஊருக்காக உழைக்கும் உண்மையான இதழாளர்களின் நிலை உயர பாடுபடும் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றத்தின் சேவை தொடரட்டும்!

    ஜி.விஜயகுமார்

    ReplyDelete
  3. இது நல்ல தொடக்கம். நமது பணி இப்போதுதான் தொடங்குகிறது. வேறுபாடுகளைக் களைந்து செயல்படுவோம். சாதனை புரிவோம்!!!

    ReplyDelete
  4. முதலில் மன்றத்தின் செயலராக தேர்வு செய்யப்பட்ட தங்கராஜாவுக்கு வாழ்த்துகள்.
    எந்த ஒரு திட்டத்தையும் பத்திரிகையாளர்கள் தொடங்கும் போது மிகவும் முனைப்புடன்
    செயல்படுவதும் அடுத்து வரும் சில நாள்களில் அதை அப்படியே விட்டு விடுவதும் வாடிக்கை. எனவே, இந்த புதிய முயற்சியை எவ்வளவு கடினமான பணிகள் வந்தாலும்
    விடாமல் ஒருவருக்கொருவர் தொடர்புடன் இருந்து கொண்டு செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். உங்கள் அனைவரது இந்த புதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது செயல்பாடுகள் பிற மாவட்டங்களில் உள்ள மற்ற செய்தியாளர்களுக்கு முன்னுதரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. நன்றி.

    உங்களது நண்பன்
    ஆர்.சிவகுமார், சென்னை.

    ReplyDelete