சேலம் மாவட்டம் ஆத்தூரில், எலைட் இன்னோவேசன் என்ற பி.பி.ஓ கால் சென்டர், மற்றும் மாணவர்கள் தனித்திறன் மேபாட்டு பயிற்சி நிறுவனத்தை துவக்கி வைத்துப் பேசிய பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முத்துச்செழியன் அவர்கள், மாணவர்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார்.
"இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் பெரும்பான்மையானர்களுக்கு தனித்திறன் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. எதிர்காலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வர வாய்ப்புகள் உள்ளது. அவற்றை பெறுவதற்கு நீங்கள் தயாராக வேண்டும், குறிப்பாக 2015 –ம் ஆண்டுக்குள் நாம் நாட்டை சேர்ந்த ஆறு இலட்சம் இளைஞர்களுக்கு மேற்கத்திய நாடுகளிலும், அதைவிடவும் பத்து மடங்கு நம் நாட்டிலும் வேலைக்கு தேவைப்படுகிறார்கள், அனால் அதற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது மாணவர்களாகிய உங்களின் கையில் தான் உள்ளது.
குறிப்பாக, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வது, சரளமாகவும், இனிமையாக பேசுவது, வணிக மேம்பாடு, மனஅழுத்தம், ஆளுமைத்த் திறன், நிவாக கட்டமைப்பு, வங்கி நடைமுறைகள் போன்றவற்றை திறன்களை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பெருநகரங்களில் மட்டுமே செயல் பட்டு வந்த இது போன்ற பயிற்சி நிறுவனங்கள் ஆத்தூர் போன்ற சிறிய ஊர்களில் துவங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. கிராமப்புற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், படித்து முடித்த மாணவர்கள் இந்த நிறுவனத்தில் பயிற்சியை பெறுவதின் மூலம் தங்களின் எதிர்காலத்தை மிகவும் சிறப்பானதாக அமைத்துக் கொள்ள முடியும்" என்ற துணை வேந்தரின் கருத்துரை மாணவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்தது.
துணை வேந்தருக்கு அடுத்தார்ப் போல ஆத்தூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணி அவர்கள் மாணவர்களிடையே நல்லுரை ஆற்றினார்.
"இன்றைக்குப் படித்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் மிகவும் சிறப்பாக படிக்கிறார்கள். 500க்கு 499 மதிப்பெண் எடுத்தால் போதும் வாழ்கையில் முன்னேறிவிடலாம் என்று யாராவது உறுதியாக சொல்லமுடியுமா..? முடியாது காரணம் முயற்சி, ஒழுக்கம், நேர்மை, பண்பு இவை அனைத்தும் ஒருங்கிணைத்த கட்டமைப்புடன் கூடிய வகையில் தன்னை ஒருவன் வடிவமைத்துக் கொள்ளவேண்டும். அப்படி வடிவமைத்தால் மட்டுமே ஒரு சிறந்த மனிதனாக வளரமுடியும்.
நான் தினம் தினம் பல வழக்குகளை சந்திப்பவன், எனது அனுபவத்தில், நான் நேரில் பார்த்தவகையில், பணம் செல்வாக்கு எல்லாவற்றையும் பெற்றவன் கூட, நல்ல மனிதனாக இருந்தால் மட்டுமே அவனுக்கு புகழ் கிடைக்கிறது.
இப்போது நல்லவர்களை காட்டிலும் கெட்டவர்கள் தான் கூடுதல் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
சமிபகாலமாக் நீதி மன்றங்களுக்கு அதிகமாக வரும் வழக்குகள் 366,ஏ, இது மைனர் பெண்ணை கடத்துவதற்கு போடப்படும் செக்ஸ்சன். காவல்துறையினர் கைது கொண்டுவருபவர்களில், இருபது முதல் இருபத்தி ஐந்து வயதுக்கு குறைவான வயதுடைய இளைஞர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
எளிதில் உணர்ச்சிவசப்படுதல், பிரச்சனைகளை இப்படி எதிர் கொள்ளத்தெரியாதாது போன்ற காரணங்களால் தான் இளைஞர்கள் இப்போது அதிகம் வழக்குகளில் சிக்கி குற்றவாளியாகி விடுகிறார்கள். அரசும், சமூக அமைப்புகளும், இதை சரியான கண்ணோட்ட்டத்தில் கொண்டுபோய் தடுக்க வேண்டும் அதற்கு இது போன்ற பயிற்சி மையங்கள் அவசியம் தேவை.
எங்களை போன்ற நீதிபதிகளுக்கு வேலைக்கு வந்த பின்னர், தொடர்ந்து பயிற்சி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோலவே மாணவர்களாகிய நீங்கள் வேலைக்குச் சேரும் முன்னரே பயிற்சி எடுத்துக் கொள்வது உங்களுக்கும், நம் நாட்டுக்கும் நல்லது" என்றார்.
- - சிவசுப்ரமணியன்
No comments:
Post a Comment